சிறுமி உயிரை பறித்த ஓட்டை பிளாட்பார்ம்!
சென்னை:சென்னை கடற்கரைக்கு குடும்பத்துடன் காணும் பொங்கலைக் கொண்டாட சென்ற 12வயது சிறுமி, கூவம் நேப்பியர் பால பிளாட்பாரத்தில் இருந்த துளை வழியாக ஆற்றில்விழுந்து பரிதாபமாக இறந்தாள்.
வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபுவின் மகள் தமிழழகி (12) 7ம்வகுப்பு படித்து வந்தாள்.
காணும் பொங்கலன்று தனது சித்-தப்பா, சித்தி சரசு உள்ளிட்ட உறவினர்களுடன்பிற்பகல் 1.30 மணிக்கு மெரீ-னா கடற்கரைக்கு சென்றார். கடற்கரையில் காணும்பொங்கலை சந்தோஷமாக கொண்டாடிய அவர்கள் வீடு திரும்புவதற்காக மாலை6.30 மணிக்கு அண்ணா சமாதி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர்.
ஆனால் அங்கு நெரிசல் அதிகம் இருந்ததால், பொருட்காட்சிக்கு செல்லலாம் எனஅருகில் உள்ள தீவுத் திடலுக்குக் கிளம்பினர். கூவம் ஆற்றின் மீது உள்ள நேப்பியர்பாலத்தின் மீது அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பிளாட்பாரத்தில் இருந்த ஒரு சிமெண்ட் சிலாப் சரியாக மூடப்படாமல்பள்ளமாக இருந்தது. அதைக் கவனிக்காத தமிழழகி அதில் கால் வைக்கவே, தடுமாறிதுளை வழியாக கீழே ஆற்றுக்குள் விழுந்தாள். கூவம் ஆற்று சேறில் சிக்கிக் கொண்டதமிழழகி உயிருக்குப் போராடினாள்.
அவரைக் காப்பாற்ற முடியாமல் குடும்பத்தினர் மேலே தத்தளித்தனர். தீயணைப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் உடனடியாக வரவில்லை.
இந் நிலையில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த தலைமைச் செயலக ராணுவடிப்போவில் வேலை பார்க்கும் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றுக்குள் குதித்துசிறுமியைக் காக்க முயன்றனர்.
சிறிது நேர முயற்சிக்குப் பின்னர் சிறுமியை மீட்ட அவர்கள் அவரை மேலே கொண்டுவந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு தமிழழகியைக் கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு தமிழழகியின் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் தெரிந்து விரைந்துவந்த தமிழழிகியின் பெற்றோர் பாபுவும், துளசியும் உருண்டு புரண்டு அழுதனர்.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே எனது மகள் இறந்து விட்டாள்.பிளாட்பாரத்தை சரியாக வைத்திருந்தால் எனது மகள் இறந்திருப்பாளா என்று கேட்டுதுளசி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது.
பிரேதப் பரிசோதனை முடிந்து தமிழழகியின் உடலை போலீஸார் பாபு, துளசியிடம்ஒப்படைத்தபோது அவர்கள் வாங்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிளாட்பாரத்தை சரியாக மூடாமல் வைத்திருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுத்தால்தான் உடலை வாங்கிக் கொள்வோம என பாபு கூறினார். இதையடுத்துபோலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி உடலைப் பெற்றுக்கொள்ளச் செய்தனர்.
வழக்கம் போல, எல்லாம் முடிந்த பிறகு ஓடி வரும் அதிகாரிகள் இந்த முறையும்,லேட்டாக வந்து சிறுமியை காவு வாங்கிய பிளாட்பார ஓட்டையை மண், சிமென்ட்போட்டு லேசாக மொழுகி விட்டு சென்று விட்டனர்.
ஆனால் கால் வைத்தால் மறுபடியும் யாரேனும் உள்ளே விழ நேரிடும் என்றநிலையில்தான் அந்த பிளாட்பாரம் தொடர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது.
திருந்தாத ஜென்மங்கள்...












Click it and Unblock the Notifications