இன்று இந்தியா கிரையோஜெனிக் சோதனை!
சென்னை:முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக்ராக்கெட் என்ஜினின் முழுமையான சோதனை இன்று நெல்லை மாவட்டம்மகேந்திரகிரியில் நடைபெறவுள்ளது.
இந்த சோதனையின் முடிவை இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானிகள் மிகுந்தஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
தகவல் தொடர்புக்கு உதவும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்கள், மனிதனைவிண்ணுக்கு அனுப்புவது, நிலாவுக்கு செயற்கைக் கோளை அனுப்புவது போன்றஇந்தியாவின் கனவுத் திட்டங்களுக்கு இன்றியமையாதது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.
இது ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விட அதிக திறன் கொண்டது. இந்தராக்கெட்டை ஏவ திரவ ஆக்ஸிஜன், திரவ ஹைட்ரஜன் கலவை தான் எரிபொருளாகபயன்படுத்தப்படுகிறது.
ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் பல நூறு டிகிரிகள் மைனஸ் வெப்ப நிலையில்குளிர்வித்து திரவமாக்கி எரிக்கும் தொழில்நுட்பம் தான் கிரையோஜெனிக்.
இந்தத் தொழில்நுட்பம் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் மட்டுமே உள்ளன.இதனால் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளுக்கான தேவைப்படும் கிரையோஜெனிக்என்ஜின்களை இதுவரை ரஷ்யாவிடம் இருந்தே இந்தியா வாங்கி பயன்படுத்தி வந்தது.
இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்தபோதிலும் அதைஅமெரிக்கா தடுத்தது. இதையடுத்து இந்தியாவே கிரையோஜெனிக் ராக்கெட்என்ஜின்கள் தயாரிப்பில் இறங்கியது.
கிட்டத்தட்ட 10 ஆண்டு கால உழைப்பின் பலனாக இப்போது இந்தத்தொழில்நுட்பத்தின் முக்கிய நிலையை இந்தியா எட்டிவிட்டது.
இந்த என்ஜினின் ஒவ்வொரு கட்டமும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் முழுமையான ஒரு பரிசோதனை இன்று மகேந்திரகிரியில் உள்ள திரவஎரிபொருள் ஆய்வு மையத்தில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 720 வினாடிகளுக்கு என்ஜின் இயக்கிப் பார்க்கப்படவுள்ளது. இந்தபரிசோதனை வெற்றி பெற்றால், ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா முழுத்தன்னிறைவு பெறும். அத்தோடு வல்லரசு நாடுகளுக்கு இணையான அந்தஸ்தையும்இந்தியா பெற்று விடும்.
உலகின் அதி நவீன ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நாடுகளின்வரிசையில் இந்தியாவையும் சேர்க்க உதவும் இந்த பரிசோதனையின் முடிவைஜனாதிபதி கலாமில் ஆரம்பித்து இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானிகள்அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 50 வினாடிகளுக்கு கிரையோஜெனிக் இயந்திரம்இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இஸ்ரோ முதல் முறையாக முழுமையான பரிசோதனையை இன்றுநடத்தவுள்ளது.
நாளை மாலை இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications