கனடாவில் காணாமல் போய் அமெரிக்காவில் மீண்ட இந்திய சிறுவன்
Subscribe to Oneindia Tamil
டொரண்டோ: கடந்த 2005ம் ஆண்டு கனடாவில் காணாமல் போன இந்திய சிறுவன் அமெரிக்காவில்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கிரேட்டர் டொரண்டோ நகருக்கு அருகே உள்ள பிராம்ப்ட்டன் என்றநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த தீபக்குமார் படேல் என்ற 14 வயது சிறுவன்கடந்த 2005ம் ஆண்டு காணாமல் போய் விட்டான்.
இதையடுத்து டொரண்டோ காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு படேலை தேடும்முயற்சிகள் நடந்தன.
இந் நிலையில் அமெரிக்காவின் நெப்ட்யூன் சிட்டி என்ற நகரில் தனது உறவினர்வீட்டில் படேல் இருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது.
படேல் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவனது கனடா வீட்டுக்கு மீட்டுஅழைத்து வரப்படுவான் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவன் உறவினர்வீட்டுக்கு எப்படிப் போனான் என்பது உடனடியாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications