முகர்ஜி, லத்திகா, சந்திரசேகரன் பதவி விலகனும்:இல்லாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அதை அதிமுகபுறக்கணிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Jayalalitha

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகராட்சியின் 99 வார்டு உறுப்பினர்களின் வெற்றியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்அளித்த உத்தரவு, நாட்டில் பல நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

99 கவுன்சிலர்களின் ராஜினாமா நாடகமும் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில் துணை மேயர் பெயரில்மாநாகராட்சிக் கூட்டம் கூடுவதாக அறிவிப்பும் வந்திருக்கிறது.

lathika charan and DGP mukerjee

மூன்றில் இரண்டு பங்குக்கு மறு தேர்தல் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்றால் அது அதிகாரப்பூர்வமானஅறிவிப்புதான். முதல் கோணல் முற்றும் கோணல் என்று அடிக்கடி கருணாநிதி கூறுவது போன்றதுதான் இந்தத்தீர்ப்பும்.

மக்கள் பங்கேற்காத தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் துணை மேயர் மூலம்எடுக்கப்படும் முடிவுகள் செல்லத்தக்கதோ, ஏற்கத்தக்கதோ அல்ல.

நியாயமாகப் பார்த்தால் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மாநகர மன்றத்தின் நிர்வாகத்தை ஆணையரிடம்ஒப்படைத்திருக்க வேண்டும்.

சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என அனைத்துமாநகராட்சிகளிலும் இதே நிலைதான்.

Chandrasekaranபண்ருட்டி போன்ற நகராட்சிகளிலும் காவல்துறை உதவியுடன் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்குதேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.

இதற்குப் பொறுப்பேற்று கருணாநிதி பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்.அவருக்கு துணையாக இருந்த தேர்தல் ஆணைய செயலாளர், அதிகாரிகள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.உள்ளாட்சித் துறை பொறுப்பு வகிக்கிற ஸ்டாலின் விலக வேண்டும்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உறுதுணையாக இருக்கத் தவறிய டிஜிபி முகர்ஜி டிஸ்மிஸ்செய்யப்பட்டிருக்க வேண்டும். மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பை வகிக்கிற லத்திகா சரணும், கூடுதல்ஆணையர் ஜாங்கிட்டும் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

மாநகராட்சி கலைக்கப்பட்டு 155 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்துவதே தவறுக்கு பிராயச்சித்தமாக இருக்கும்.இதுதான் அதிமுகவின் கொள்கை.

இதை மீறி தவறிழைத்த அதே ஆணையரைக் கொண்டு காலியாக உள்ள வார்டுகளுக்கு தேர்தல் நடத்தவதுஇன்னொரு வரலாற்று பிழையாகி விடும். தற்போதைய தேர்தல் ஆணைய>ன் வழிகாட்டுதலில் இனியும் தேர்தல்நடந்தால் அதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது.

பிப்ரவரி 8ம் தேதி நடைபெறுவதாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகபங்கேற்காது, புறக்கணிக்கும்.

இந்த மாநில தேர்தல் ஆணையரின் வழிகாட்டுதலில் இனி எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதை அதிமுகபுறக்கணிக்கும்.

சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளுக்கும் ராணுவத்தின் பாதுகாப்புடன்தான் மறு தேர்தல் நடத்தப்படவேண்டும். தற்போதுள்ள மாநில தேர்தல் ஆணையர் இருக்கும் வரை சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்ல,தமிழ்நாட்டில் வேறு எந்த உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது.

தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும். அப்படி அவர் முன்வரவில்லை என்றால் சட்டப்படி அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல டிஜிபி முகர்ஜி பதவியில் உள்ளவரை தமிழகத்தில் இனி எந்தஉள்ளாட்சித் தேர்தலும் நடைபெறக் கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நெல்லை-நாகை-திருச்சி மா.செ மாற்றம்

இதற்கிடையே அதிமுகவில் மீண்டும் 3 மாவட்டச் செயலாளர்களை நீக்கியுள்ளார் ஜெயலலிதா. அத்தோடுதிருநெல்வேலி, நாகப்பட்டிணம் மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றியுள்ளார்.

நெல்லை மாவட்ட (மாநகர்) செயலாளராக பாப்புலர் முத்தையா நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல திருச்சிமாவட்டச் செயலாளராக முருகையனும், நாகப்பட்டிணம் மாவட்டச் செயலாளராக சசிகலா சமூகத்தைச் சேர்ந்தஓ.எஸ்.மணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை, நாகை மாவட்டங்களின் எம்ஜிஆர் மன்றத்தில் ஆரம்பித்து சிறுபான்மையினர் பிரிவு வரைஅனைத்திலும் முக்கிய நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+