ஜெ.வுக்கு ஆள் தேடும் சோ: கருணாநிதி
சென்னை:அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகளைத் தேடி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் துக்ளக் ஆசிரியர் சோ எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:
கேள்வி: அதிமுகவுடன், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என சோசொல்லியுள்ளாரே?
கருணாநிதி: ஜெயலலிதாவுக்காக கூட்டணி சேர்க்க அவரும் படாதாபாடு பட்டுக் கொண்டுதான் உள்ளார்.
கேள்வி: திமுக அளித்த வாக்குறுதிகளை .ழுமையாக செய்யாமல் பகுதி பகுதியாக செய்து வருகிறீர்கள் என்றுசோ சொல்லியுள்ளாரே?
கருணாநிதி: மகாபாரதத்தை துக்ளக் இதழில் வெளியிடப் போவதாக சோ சொன்னார். அதைப் பகுதிபகுதியாகத்தானே எழுதினார், ஒரே சமயத்தில் எழுதி முடித்து விட்டாரா என்ன?
கேள்வி: 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி. இப்போது கையளவேனும் தருகிறேன் என்கிறார் எனசோ கூறியுள்ளாரே?
கருணாநிதி: நான் சட்டப் பேரவையில் சொன்னது என்ன? கையளவு நிலம்தான் இருக்கிறது என்றாலும் அதைநிலமற்ற ஏழை விவசாயிக்குத்தான் தருவோம் என்றேன். இப்படிச் சொன்னதின் உணர்வுதனை சோ போன்றஎழுத்தாளர்கள் புரிந்து கொள்ளாததுதான் தமிழ்நாட்டின் பெரிய சோகம்.
இந்த ஆட்சியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மாவட்டந்தோறும்ம நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவற்றின்வாயிலாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் 50,000 ஏக்கர் நிலம்வழங்கப்பட்டிருக்கிறது, பாசணக் கிணறும் தோன்டித் தரப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் எல்லாம் படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளதே, பத்திரிகைகளைத் தவறாமல் படிக்கும்பழக்கமுடைய சோ கண்களில் எப்படி இந்த விவரங்கள் படாமல் போயின?
கேள்வி: இலவசத் திட்டங்களால் பீகார் அரசு போல அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தரக் கூட முடியாத நிலைதமிழகத்திலும் ஏற்படுமோ என சோ கவலை தெரிவித்துள்ளாரே?
கருணாநிதி: ஆடு நனைகிறதே என புலி கவலைப்படுகிறது போலும். அல்லது மக்கள் மத்தியில் கிலி ஏற்படுத்ததிட்டம் போலும். ஜெயலலிதா ஆட்சி 56,000 ரூபாய் கடன் சுமையை வைத்து விட்டுச் சென்றது. அதையும்சமாளித்து, மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் நிறைவேற்றும் திறமை இருக்கவே செய்கிறது.
அதற்காக சலுகைகள் வழங்காத சர்வாதிகாரியாகவோ, கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாதகொடுங்கோலர்களாக இருக்க மாட்டோம், ஜெயலலிதாவைப் போல.
கேள்வி: திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறாரே.?
கருணாநிதி: ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டிய பத்திரிக்கையாளர் சோ, அவருடைய துக்ளக் இதழில்,பெருவாரியான மக்களிடையே இந்த அரசைப் பற்றி இன்னும் அதிருப்தி ஏற்படவில்லை என்றுதான் நானும்நினைக்கிறேன் என்று சோ எழுதியுள்ளார். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரிந்தபோதிலும், தொண்டர்களைநம்ப வைப்பதற்காக இப்படியெல்லாம் அறிக்கை விட வேண்டியுள்ளது.
கேள்வி: வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குநிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதே?
கருணாநிதி: கடந்த காலத்தில் தமிழக, கர்நாடகப் பகுதிகளில்தமிழக சிறப்பு அதிரடிப்படையினரும், தமிழக,கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை குறித்து மனித உரிமைஆணையத்தால் விசாரணை நடத்த நீதிபதி சதாசிவம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிஷன் அறிக்கை அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக நிவாரணத்தொகை வழகப்பட்டது. அதற்கான செய்தி அப்போதே வெளிவந்தது. தற்போது மனித உரிமை ஆணையத்தின்பரிந்துரைப்படி அதிகாரப்பூர்வமாக முழு விவரங்களும் கிடைத்த பின்னர் மீதமுள்ள தொகையும்மபாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications