சென்னையில் 10 வயது சிறுமி காரில் கடத்தல்!
சென்னை:சென்னையில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டாள்.அவளைக் கடத்தியது யார் என்று தெரியவில்லை.
சென்னையில் சிறுவர், சிறுமியர் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில்அரவிந்த் என்ற சிறுவன் அவனது நண்பர்களாலேயே கடத்தப்பட்டு கொடூரமாககொலை செய்யப்பட்டான்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர் கடத்தல் தொடர்பான புகார்களைசீரியஸாக கருதி விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிண்டி, மடுவங்கரை அருகே உள்ள கன்னிகாபுரத்தில் 10 வயதுசிறுமி கடத்தப்பட்டாள். அவளது பெயர் மோனிஷா. தந்தை கோபால் கட்டடமேஸ்திரியாக உள்ளார். தாயார் கல்பனா.
மோனிஷா கன்னிகாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 5ம் வகுப்புபடிக்கிறாள். அவளது தம்பி மோகனும் அதே பள்ளியில் 4வது வகுப்பு படிக்கிறான்.
நேற்று மாலை இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுவெள்ளை நிற டாடா சஃபாரி கார் ஒன்று அவர்கள் அருகே வந்தது. அதிலிருந்துஇறங்கிய 2 பேர் பொம்மை வாங்கித் தருகிறோம் வாங்க என்று கூப்பிட்டுள்ளனர்.
ஆனால் மோகன் வேண்டாம் என மறுத்து நடையைக் கட்டியுள்ளான். மோனிஷாவுக்குபொம்மை என்றதும் சபலம் ஏற்பட்டு வருகிறேன் என்று கூறி அவர்களுடன் காரில்ஏறியுள்ளாள்.
பின்னர் மோனிஷாவை அந்த கூட்டம் காருக்குள் போட்டுக் கொண்டு வேகமாகசென்றது. கார் சென்றவுடன்தான் மோனிஷாவுக்கு பயம் ஏற்பட்டது. கதறி அழத்தொடங்கினாள்.
நடிகை ஷோபனாவின் வீடு உள்ள தெருவில் சென்ற அந்தக் கார் அது முட்டுச் சந்துஎன்பதால் மேற்கொண்டு போக முடியாமல் ரிவர்ஸ் வந்து ஈக்காடுதாங்கல் நோக்கிப்போக ஆரம்பித்தது.
அடையாற்றுப் பாலத்தின் மீது கார் போனபோது மோனிஷா பெரும் குரலெடுத்துசத்தம் போட்டதால் பயந்து போன கடத்தல்காரர்கள் மோனிஷாவை பாலத்தின் மீதுஇறக்கி விட்டு விட்டு பறந்து விட்டனர்.
மோனிஷா அழுது கொண்டு நிற்பதைப் பார்த்த ஒரு ஆட்டோ டிரைவர் அவளைஎம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு நடந்ததைச் சொன்னாள்மோனிஷா. இதையடுத்து கோபாலுக்கு தகவல் கொடுத்தனர் போலீஸார்.
கோபாலும், கல்பனாவும் விரைந்து வந்து தங்களது மகளைப் பார்த்து கதறி அழுதனர்.ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோர் மோனிஷாவிடம்நேரடியாக விசாரணை நடத்தினர்.
மோனிஷா கொடுத்த தகவலின் அடிப்படையில் கடத்தல்காரர்களைப் பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications