தென்னிந்தியாவில் 50 தீவிரவாதிகள் ஊடுறுவல்!
பெங்களூர்:தென்னிந்தியாவில் குண்டுவெடிப்புகள் உள்ளிட் பயங்கரவாத செயல்களில்ஈடுபடுவதற்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 50 பயங்கர தீவிரவாதிகள்ஊடுறுவியிருப்பதாக பெங்களூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் சமீபத்தில் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இம்ரான் என்பவர்பிடிபட்டார். அவரிடம் பெங்களூர் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளின் கவனம் இப்போது வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்குமாறியுள்ளது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிகஅளவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தகர்த்தால், தென்னிந்தியாமட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை தகர்க்க முடியும், உலகஅளவில் கவனத்தைப் பெற முடியும் என தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தற்போது தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கும் திட்டத்துடன் 50 பயங்கர தீவிரவாதிகள்பெங்களூர் மற்றும் பிற தென்னிந்திய நகரங்களில் ஊடுறுவியுள்ளதாக இம்ரான்தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் தற்கொலைப் படையினர் ஆவர். இம்ரான் கொடுத்த தகவலின்அடிப்படையில் இந்த பயங்கரவாதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் கர்நாடகபோலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இம்ரான் கர்நாடக மாநிலம் ஹம்பியில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்பவர்போல நடித்து பயங்கரவாதிகளுக்கு உதவி வந்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு நடந்தடெல்லி தொடர் குண்டுவெடிப்பு, மும்பையில் கடந்த ஜூலையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களிலும் இம்ரானுக்குத் தொடர்பு இருப்பதுவிசாரணயில் தெரிய வந்துள்ளது.
சிமி அமைப்புடன் இம்ரானுக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளதும், சிமி அமைப்பின்நாசவேலைகளில் இம்ரானும் பங்கு வகித்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில்தெரிய வந்துள்ளது.
இம்ரான் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்என சந்தேகிக்கப்படும் குல்பர்கா, ஹூப்ளி, பீஜப்பூர், பெல்காம், ராய்ச்சூர் ஆகியநகரங்களில் போலீஸார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications