ஸ்டாலின் இருக்கும் வரை உருப்படாது-கேப்டன்
சென்னை:இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் (ஸ்டாலின்) இருக்கிற வரை மாநகராட்சித் தேர்தல் முறையாக நடக்காது என தேமுதிகதலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகள் நாடறிந்த ஒன்று. இதை எதிர்த்து தாக்கலான வழக்கில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மனுவை நிராகரித்தார், மற்றொரு நீதிபதி 99 வார்டுகளில் நடந்த தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று நான் தேர்தல் சமயத்தில் சொன்னது நிரூபணமாகிறது. இந்ததீர்ப்பை ஒட்டி 99 வார்டுகளின் கவுன்சிலர்களும் ராஜினாமா செய்வதாக கருணாநிதி அறிவித்தார். இதை தோழமைக் கட்சிகள்வரவேற்றிருப்பது வியப்புக்குரியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றே மறு தேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால்வரவேற்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் இதை எப்படி வரவேற்க முடியும்?. மூன்றாவது நீதிபதியின் முடிவுக்குகாத்திருக்கவும், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டுக்கு வாய்ப்பிருந்தும் இம்முடிவை மேற்கொண்டதாக கருணாநிதி தம்பட்டம்அடிக்கிறார்.
அங்கேயும் கண்டனம் வந்தால் அவர் ஆட்சியை இழக்க நேரிடும். அதை முன்கூட்டியே தவிர்க்கும் உபயம் தான்கருணாநிதியின் இந்த நடவடிக்கை. மாநகராட்சியை முழுக்க கலைத்து விட்டு மறுதேர்தல் (155 வார்டுகளில்) நடத்துவது தான்முறை. ஏனெனில் மற்ற இடங்களிலும் நேர்மையாக தேர்தல் நடக்கவில்லை.
தேர்தலன்று போலீசார் துணையோடு ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப் போட்டதை நானே கண்டதால் தான்ஓட்டுப்போட மறுத்து, அன்றே போலீஸ் கமிஷனரிடம் நேரில் சந்தித்து முறையிட்டேன். தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் இவ்வாறே நடந்ததால், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி விலகவும் அறிக்கை வெளியிட்டேன்.
எய்தவன் இருக்க அம்பை நோவது போல 99 கவுன்சிலர்களை பதவி விலக வைத்தது கண்துடைப்பு. இதற்கு பொறுப்பேற்றுஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றேன். ஆனால், அதற்காக என் மீதே வழக்குப் போடுவதாக தேர்தல் கமிஷனர்எச்சரித்தார்.
தேர்தலை முறையாக நடத்த தனது சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை என நீதிபதி கூறியுள்ளதற்கு தேர்தல் கமிஷனர் என்னபதில் சொல்லப் போகிறார் என நானல்ல, இந்த நாடு எதிர்பார்க்கிறது.
மீண்டும் 99 இடங்களில் தேர்தல் நடத்துவது வெறும் சடங்காகத் தான் இருக்கும். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலை மத்தியதேர்தல் ஆணையம் மூலம் நடத்த வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.
இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் இருக்கிற வரை இது பகல் கனவு தான். வெறும் சம்பிரதாயத்திற்காக நடக்கும் தேர்தலைதேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications