அரசியல் சட்டத்தை திருத்த கோரும் தமிழக அரசு
சென்னை:தமிழக சட்டசபை இன்று காலை கூடியது.
இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன்கூட்டத் தொடர் ஆரம்பமானது.
(அரசின் உரையை ஆளுநர் படிப்பது தான் ஆளுநர் உரை). பர்னாலா உரையைப்படிக்கத் தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அரசுக்கு எதிராககோஷம் எழுப்பினர். அவர்களை ஆளும் தரப்பு கண்டு கொள்ளவில்லை. எதிர்கூச்சலும் போடவில்லை.
இதையடுத்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்வதாக கூறிவிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். வெளியே சென்று லாபியில் நின்றபடிமுதல்வர் கருணாநிதியைக் கண்டித்து கோஷமிட்டனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர்தனது உரையை வாசிக்க ஆரம்பித்தார். அதிமுகவினர் கோஷத்துக்கு மத்தியில் பர்னாலா தொடர்ந்துஉரையைப் படித்து முடித்தார்.
அந்த உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்திய அரசியல் சட்டத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு விட்டன. இதற்குப் பதில் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்பஅரசியல் சட்டத்தில் முழுமையான திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித குலத்தில் மாற்றம் தவிர்க்க முடியாதது. பல நாடுகளில் அரசியல் சட்டம்திருத்தம் எழுதப்பட்டுள்ளது. பல முறை திருத்தி எழுதப்பட்டுள்ளது.
எனவே நமது நாட்டு அரசியல் சட்டத்தையும் திருத்தி எழுத வேண்டும். இந்தக்கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும், சட்ட நிபுணர்களும் தொடர்ந்துவலியுறுத்தி வருகிறார்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற ராஜ்யசபாவில்பேசுகையில், நாட்டின் சட்ட மேதைகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை மறுபரிசீலனை செய்து, மறு சீரமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதர நிலை, மக்களின்வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினர் தங்களது உரிமைகளைக்காக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
சிறுபான்மை சமூகத்தினரும் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலினஉரிமைப் பிரச்சினைகளும் உருவெடுத்து வருகின்றன.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இதன் மூலம் மையத்தில் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்திருப்பதைத் தவிர்க்கமுடியும். தேவையில்லாத பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதைப் போல தனியார் கல்வி நிறுவனங்களிலும் இந்த இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மை முஸ்லீம்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற சச்சார்கமிட்டி பரிந்துரைகளை தமிழக அரசு முழு மனதுடன் வரவேற்கிறது.
முல்லைப் பெரியாறு:
தென் மாவட்டங்களின் உயிர் நாடியான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில்விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது.
அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்ற கொள்கையில் அரசுஉறுதியாக உள்ள அதே நேரத்தில், நமது மாநில விவசாயிகளின் நலனுக்குத்தான்முன்னுரிமை கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே இப்பிரச்சினையில்உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படியே கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில்,உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த உரையின்தமிழாக்கத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார். அதன் பின்னர் சபைஒத்திவைக்கப்பட்டது.
27ம் தேதி வரை நடைபெறும்:
பின்னர் சபாநாயர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது. அக்கூட்டத்தில்சபையை 27ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாளை மறுதினம் சபை மீண்டும் கூடும். அப்போது மறைந்த முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ. கவிநிலவு தர்மராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்நிறைவேற்றப்படும். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதானவிவாதம் தொடங்கும்.
26ம் தேதி குடியரசுத் தினத்தையொட்டி விடுமுறையாகும். பின்னர் 27ம் தேதி சபைமீண்டும் கூடி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு முதல்வரும்அமைச்சர்களும் பதில் அளிப்பர். அன்றே கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படும்.
இக்கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது.












Click it and Unblock the Notifications