கிரையோஜெனிக் சோதனை தோல்வி?!
சென்னை:இஸ்ரோ திட்டமிட்டிருந்த கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜினின் முழு அளவிலான சோதனை திடீரெனஒத்திவைக்கப்பட்டது.
ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கு பயன்படும் சக்தி வாய்ந்த கிரையோஜெனிக்என்ஜின்களை தற்போது ரஷ்யாவிடமிருந்து பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது.
சுயமாக நாமே கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கும் ஆய்வு நெல்லை மாவட்டம் மகேந்திரகி>யில் உள்ளதிரவ எரிபொருள் ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது.
இந்த ஆய்வில் படிப்படியாக கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதிக்கப்பட்டு வந்தது. முதலில் 10 வினாடிகளுக்குஇந்த என்ஜின் சோதிக்கப்பட்டது. பின்னர் 60 வினாடிகளுக்கு என்ஜின் இயக்கிப் பார்த்து சோதனைசெய்யப்பட்டது.
இந்த நிலையில், 720 வினாடிகளுக்கான முழுமையான பரிசோதனையை நேற்று மாலை நடத்ததிட்டமிடப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்ததேவைப்படும் நேரம் 720 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே நேற்றைய சோதனை முடிவை இந்திய விஞ்ஞானிகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்தசோதனை வெற்றி பெற்றால், அமெ>க்கா, ரஷியா, ஜப்பான், சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் வ>சையில்இந்தியாவும் இணையும். மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் என்பதால் மிகுந்தஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த சோதனை.
நேற்றைய சோதனையைப் பார்வையிடுவதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திரவ இயக்க எரிபொருள்திட்ட இயக்குனர் பெருமாள், இணை இயக்குனர்கள் எம்.கே.ஜி.நாயர், முகம்மது முஸ்லீம் உள்ளிட்டவிஞ்ஞானிகள் குழுமியிருந்தனர்.
மாலை 6.20 மணிக்கு சோதனை தொடங்கியது. என்ஜின் ஓடத் தொடங்கி 30 வினாடிகள் கழிந்த நிலையில் திடீர்என சோதனை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் முகத்தில் ஏமாற்றமும், சோகமும் நிலவியது.
சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம்கூறுகையில், முறைப்படி சோதனை தொடங்கப்பட்டது. இந்த என்ஜினில் மொத்தம் 200 அளவைகள்(பாராமீட்டர்ஸ்) உள்ளன. அதில் 3 அளவைகள் சோதனை தொடங்கிய பிறகு சரியாக இல்லை என்பது தெரியவந்தது.
குறிப்பாக வெப்பமானி, திரவ ஆக்ஜிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவேதான் சோதனை நிறுத்தப்பட்டது.
இதை தோல்வி என்று கூற முடியாது. இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் இதேபோல ஒரு சோதனை நடத்தப்படும்.இந்த சோதனை வெற்றி பெறும் என நம்புகிறோம்.
இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜி.எஸ்.எல்.வி. விண்ணில் செலுத்தப்படும் என்றார்நாயர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications