விமான படை வேண்டாமா?-கருணாநிதி நக்கல்
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பாதுகாப்புக்கு ராணுவத்தை கூப்பிடும் அதிமுக,கடற்படை, விமானப் படையையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே என்று முதல்வர்கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: அண்ணா எழுதி, அவரே ராவணன் வேடத்தில் நடித்த நீதி தேவன் மயக்கம்என்ற நாடகத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்ட கருத்து என்ன?
கருணாநிதி: ராவணனை இரக்கமற்ற அரக்கன் என்று கம்பர் கூறியது தவறு என்றும்,கம்பராமாயணக் கதையின்படி; ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போனபோதுகூட தொட்டுத் தூக்காமல் பர்ணசாலையுடன்தான் தூக்கிச் சென்றான் என்றும்,சீதையிடம் தவறாக நடக்கவில்லை என்றும் நீதி தேவனிடம் ராவணன் வாதாடுகிறகாட்சிகளும்;
அகல்யாவிடம் இந்திரன் நடத்திய காமச் சேட்டையும், குருபத்தினி தாரையிடம்அவர்கள் சிஷ்யன் சந்திரன் நடத்திய காதல் லீலைகளும் விளக்கப்பட்டு, இறுதியாகராவணன் வேடத்தில் உள்ள அண்ணா நீதி தேவனைப் பார்த்து கேட்பார்;
இப்போது சொல்லுங்கள் நீதி தேவா, ராவணன் இரக்கமற்றவனா அல்லது இந்ததேவாதி தேவர்கள் இரக்கமற்றவர்களா.? என்று தீர்ப்பு சொல்ல முடியாமல், அதாவதுஉண்மையை ஒப்புக் கொள்ள முடியாமல் நீதி தேவன் நீதிமன்றத்திலேயே மயங்கிவிழுவார். அதுதாான், அண்ணா எழுதி நடித்த நீதி தேவன் மயக்கம் நாடகமாகும்.
கேள்வி: ராணுவத்தை வைத்து மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சிலர்சொல்லியுள்ளார்களே?
கருணாநிதி: கப்பற்படை, விமானப் படையை ஏன் விட்ட விட்டார்கள் என்றுதெரியவில்லை.
கேள்வி: அதிமுக ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையாளர் பற்றி?
கருணாநிதி: அவரைப் பற்றி இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால்அவரை அதிமுக ஆட்சியில் பலமுறை பதவி நீட்டிப்பு கொடுத்து, இறுதியாக ஆயுள்முடியும் வரையில் அவர்தான் மாநிலத் தேர்தல் ஆணையாளர் என்று ஆணைபிறப்பித்திருந்தார்கள். என்னே ஜனநாயக மாண்பு!
கேள்வி: நீங்களே முன்வந்து சென்னை மாநகராட்சித் தேர்தலில் மீண்டும் 99இடங்களில் நிற்கிறோம் என்பது உங்களது குற்றத்தை நீங்களே ஒப்புக்கொண்டதாகதானே அர்த்தம்?
கருணாநிதி: கம்பீரமாகத் தூக்கு மேடைக்கு நடந்து வந்து தூக்குக் கயிறை முத்தமிட்டுமாண்டு மடிந்தானே கட்டபொம்மன்- என் முகத்தை மூடாதே, வீண் பழியேற்று விழிமூடத் தயாராகவே இருக்கிறேன் என்று தூக்கு மேடையில் தொங்கினானே சதாம்உசேன் - அவர்கள் எல்லாம் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அர்த்தமா?
இந்தக் கேள்விக்கான பதிலே, நீங்கள் குறிப்பிடும் அந்தச் சிலரது விஷமத்தனமானவிமர்சனத்துக்கான விளக்கமாகும்.
கேள்வி: 2001 உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை, சுனாமியாகக் கொந்தளித்தது என்றுகூறியிருந்தீர்களே?
கருணாநிதி: ஆம், இதில் நான் சொல்வதை மட்டுமல்ல, இதோ 2001 மாநகராட்சித்தேர்தலில் அதிமுகவினர் நடத்திய அராஜகங்களை அப்போது வெளிவந்தபத்தி>க்கைகள் விரிவாக விவரித்திருக்கின்றன. அன்று நடந்ததும் இன்று நடந்ததும்ஒரே அளவானதா என்பதை நீதி நெறி தவறாமல் நினைத்துப் பார்த்து நல்ல தீர்ப்பைஅவர்களே கூறிக் கொள்ளட்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications