கேரள நகைக்கடை உரிமையாளர் கொலை:பண்ணாரி கோவில் உண்டியலில் போடப்பட்ட நகை!

Subscribe to Oneindia Tamil

பண்ணாரி:கேரள நகைக் கடை உரிமையாளரைக் கொன்ற 2 பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து அதை பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் போட்டது.

அந்த நகையை கேரள போலீஸார் கேட்டபோது, உரிய அனுமதி இல்லாமல் தர முடியாது என்று கோவில்நிர்வாகம் மறுத்து விட்டதால் கேரள போலீஸார் திரும்பிச் சென்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சித்தநாத். 38 வயதான இவர் திருச்சூரில் நகைக் கடை வைத்திருந்தார்.இவரது கடையில் பங்குதாரராக இருந்தவர் பிரதீப்.

சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் ஒரு சேட் இருக்கிறார். அவரிடம் தங்க நகைகளைக் கொடுத்தால் நல்லவிலை கொடுக்கிறார். நமது நகைகளை அவரிடம் விற்கலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சித்தநாத், அதிகபணம் கிடைக்கிறதே என்று எண்ணி சரி என்று கூறியுள்ளார்.

பின்னர் கடையில் இருந்த 1 கிலோ 80 கிராம் நகையுடன் கர்நாடகாவுக்கு பிரதீப்புடன் காரில் கிளம்பினார். காரைபிரதீப் ஏற்பாடு செய்திருந்த ரணேஷ்என்பவர் ஓட்டிச் சென்றார்.

ஆனால், அதன் பின் சித்தநாத் காணாமல் போனார். கர்நாடகம் சென்ற தனது கணவர் வீடு திரும்பாததைக் கண்டுகுழம்பிய அவரது மனைவி சுலோச்சனா போலீஸில் புகார் கொடுத்தார். கடைசியாக பிரதீப்புடன்தான் தனதுகணவர் சென்றதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பிரதீப்பைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது சித்தநாத் கொலை செய்யப்பட்ட தகவல்வெளியானது.

ஈரோடு மாவட்டம் திம்பம் வனப்பகுதியைத் தாண்டி இவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, மதுஅருந்தலாம் என சித்தநாத்திடம் பிரதீப்கூறியுள்ளார். பின்னர் மூன்று பேரும் காரில் இருந்தபடி மதுஅருந்தியுள்ளனர்.

சித்தநாத்துக்குக் கொடுத்த மதுவில் சயனைடு விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனால மது அருந்திய சிலவினாடிகளில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் பிணத்தை காட்டுக்குள் வீசி விட்டு, அவர் கொண்டு வந்த 1.8கிலோ நகையையும், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் கிளம்பினர். வரும் வழியில் பண்ணாரி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டஇருவரும், சித்தநாத்திடம் எடுத்த தங்கச் சங்கிலியை கோவில் உண்டியலில் போட்டு விட்டுத் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் இருவரையும் அழைத்துக் கொண்டு திம்பம் காட்டுப் பகுதிக்கு விரைந்தனர்.அப்பகுதிக்கு அருகே உள்ள புளிஞ்சூர் என்ற இடத்தில் போடப்பட்டிருந்த சித்தநாத்தின் உடலை மீட்டனர்.

பின்னர் பண்ணாரி கோவிலுக்கு விரைந்தனர். அப்போது கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணத்தை எண்ணும்பணி நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு கேரள தனிப்படை இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீதுதலைமையிலான போலீஸார் பிரதீப்மற்றும் சித்தநாத்தின் கடை ஊழியர் விஸ்வாஸ் ஆகியோருடன் அங்கு வந்தனர்.

கோவில் உண்டியலில் கிடந்த நகையை பிரதீப்பும், விஸ்வாஸும் அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்தநகையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேரள போலீஸார் கேட்டனர். ஆனால் அதை ஏற்க மறுத்த கோவில்நிர்வாகிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவு இல்லாமல் தரமுடியாது என்று கூறிவிட்டனர்.

ஏமாற்றமடைந்த கேரள போலீஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+