கிட்னி திருட்டு-9 மதுரை புரோக்கர்கள் கைது
சென்னை:சென்னை அருகே மீனவப் பெண்களிடம் சட்டவிரோதமாக சிறுநீரகங்களைத் திருடிய வழக்கில் மதுரையைச்சேர்ந்த 9 புரோக்கர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே எண்ணூரில் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின்வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு சொற்ப பணத்தைக் கொடுத்து சிறுநீரகங்களை திருடும் கும்பம் குறித்ததகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுநீரகத் திருட்டில் பல டாக்டர்கள்,மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பெண்களை ஏமாற்றி சிறுநீரகங்களைத் திருடிய கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில்இறங்கியுள்ளனர். இந்த வேட்டையில் தற்போது மதுரையைச் சேர்ந்த 9 புரோக்கர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் எத்தனை பெண்களை ஏமாற்றி சிறுநீரகஅறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர், எவ்வளவு சம்பாதித்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, எண்ணூர் சிறுநீரக திருட்டு தொடர்பாக முதல் முறையாக ஒரு பெண் சென்னை போலீஸில் புகார்கொடுத்துள்ளார். இதுவரை சிறுநீரக திருட்டு தொடர்பாக பாதிக்கப்பட்ட வேறு யாரும் புகார் கொடுக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணிடம் மல்லிகா கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கு கணவர், 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். இந்த நிலையில் கடந்த2004ம் ஆண்டு ராயபுரத்தைச் சேர்ந்த ராஜு என்பவர் என்னை அணுகினார்.
எனது சிறுநீரகத்தைத் தானமாக கொடுத்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றார். அப்போது எனக்கு 15ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. அதை அடைக்கவும், வறுமையிலிருந்து மீளவும் எனது சிறுநீரகத்தை ஒன்றரைலட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்தேன்.
பின்னர் என்னை ராஜு திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சீனி பாய் என்ற புரோக்கர் என்னை அழைத்துக்கொண்டு மதுரை சென்றார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் நான் தங்கியிருந்தேன்.(கிட்னி விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த அம்மனின் பெயர் கொண்ட பெரிய மருத்துவமனை விரைவில் சிக்கப்போகிறது என்பதை நாம் 2 நாட்களுக்கு முன் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது)
அங்கு எனது ஒரு சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்தனர். பின்னர் எனது புண் ஆறியதும்சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது என்னிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஊர் போய்ச்சேர்ந்ததும் மீதப் பணத்தைத் தருவதாக கூறினார்கள்.
சென்னைக்கு வந்ததும் ராஜுவிடம் நான் மீதப் பணத்தைக் கேட்டபோது அப்போது இருகிறேன், இப்போதுதருகிறேன் என்று கூறி இழுத்தடித்தார். நானும் விடாமல் தொடர்ந்து கேட்டு வந்தேன். அதற்கு அவர் தொடர்ந்துதொல்லை செய்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இதையடுத்து நான் பயந்து போய் கேட்பதை விட்டு விட்டேன். ராஜு மீது நடவடிக்கை எடுத்து மீதப் பணத்தைவசூலித்துத் தர வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் மல்லிகா.
சிக்கும் சென்னை மருத்துவமனைகள்:
இதற்கிடையே, சென்னையில் உள்ள முக்கியமான நான்கு மருத்துவமனைகளில் இதுபோன்ற சிறுநீரக திருட்டுஅறுவைச் சிகிச்சை அதிக அளவில் நடப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது.
அந்த மருத்துவமனைகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த மருத்துவமனைகள்மைலாப்பூர், அடையாறு, சேத்தப்பட்டு ஆகிய இடங்களில் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications