கோவை காபி பாரில் ஹூக்கா ஹெராயின்!!!
கோவை:காபி பாரில், ஹூக்கா மூலம் போதைப் புகையை நுகர வைத்து இளைஞர்களிடம் பணம் சம்பாதித்து வந்த 4பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு காபி பார் உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் வருவதுவழக்கம். சமீப நாட்களாக வழக்கத்திற்கு விரோதமாக அதிக அளவில் மாணவர்கள், இளைஞர்கள் கும்பல்அதிகம் காணப்பட்டது.
அந்த காபி பாரில் போதைப் பொருள் விநியோகம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. இதையடுத்துஅந்த காபி பாரை சோதனையிட ஆணையர் காந்திராஜன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மாறுவேடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு போதைப் பொருள்நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸ் படை அதிரடி சோதனையில் இறங்கியது. அப்போது காபிபாருக்கு உள்ளே 3 மாணவர்கள் போதையில் மயங்கிக் கிடந்தனர். அவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் போதைதெளிந்து எழுந்து ஓட முயற்சித்தனர். போலீஸார் அவர்களை வளைத்துப் பிடித்தனர்.
![]() |
காபி பாரின் மேலாளர் சாம் என்கிற சாம் ரொசாரியோ, மேற்பார்வையாளர் சுமன், பொறுப்பாளர் வேணுகோபால்மற்றும் மாய கிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஹூக்கா மூலம் போதைப் பொருளை இவர்கள் இளைஞர்களுக்கு நுகர கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது இந்த ஹூக்கா. அந்த கால மன்னர்கள் இதை வைத்துத்தான்புகை பிடிப்பார்கள்.
கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை லேசாக தணலில் இட்டு அதில் வரும் புகையை இந்த ஹூக்கா கருவிமூலம் நுகர வைத்து பணம் சம்பாதித்துள்ளனர் இந்த காபி பார் ஊழியர்கள்.
கால் மணி நேரம் புகையை நுகர 150 ரூபாய் வசூலித்துள்ளனர். நான்கு மேசைகளைப் போட்டு நான்கு ஹூக்காகருவிகளை வைத்து பிசினஸ் செய்து வந்துள்ளனர்.
![]() |
இந்த ஹூக்கா அறை தனியாக, யாரும் எளிதில் வந்து விட முடியாத அளவுக்கு ரகசியமாகவைக்கப்பட்டிருந்தது. இதனால் காபி பாருக்கு வருவோருக்கு எந்த சந்தேகமும் வர முடியாத அளவுக்குரகசியமாக நடத்தி வந்துள்ளனர்.
போலீஸார் காபி பார் முழுவதும் சோதனை நடத்தி 17 போதை பொருள் பாக்கெட்டுகள், நான்கு ஹூக்காகருவிகள், போதை பொருள் கலக்கப்பட்ட கலவை டப்பாக்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
என்ன மாதி>யான போதைப் பொருளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.இதுகுறித்து ரசாயான சோதனைக்கு போலீஸார் கைப்பற்றிய போதைப் பொருளை அனுப்பியுள்ளனர்.பெரும்பாலும் இது ஹெராயினாக இருக்கலாம் என்று தெரிகிறது.
கோவையில் உள்ள மற்ற காபி பார்களிலும் இதுபோல போதை விவகாரம் உள்ளதா என்பது குறித்து போலீஸார்சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications