நாங்களும் தேர்தலை புறக்கணிப்போம்-வைகோ
தஞ்சாவூர்:சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சி இடைத் தேர்தல், சென்னை மாநகராட்சித் தேர்தலை மதிமுகபுறக்கணிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.
தஞ்சாவூர் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதிமுகவை அழிக்க பல்வேறு முயற்சிகளை அரங்கேற்றி, அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. மத்திய,மாநில அரசுகளின் முழு பலத்தையும் பிரயோகித்து மதிமுகவை நிர்மூலம் செய்ய வேண்டும் என்றகருணாநிதியின் திட்டத்தில், அவர் எய்திருக்கும் கடைசி அஸ்திரம்தான் எல்.ஜி.-செஞ்சி.
இருவரையும் பகடைக் காய்களாக மாற்றி அவர்கள் எடுத்த முயற்சி படுதோல்வியில் முடிந்து விட்டது. மதிமுகதேர்தலில் தோல்வி அடைந்தாலும் வீழ்ச்சி அடையாது. காரணம் அது தியாகத்தால் கட்டப்பட்டது.
2004ல் கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேரக் கூடாது என முடிவு செய்தோம்.அப்போது எல்.கணேசனும், செஞ்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் பின்னர் எல்.கணேசன் மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றார். பொதுக்குழு முடிவெடுத்து விட்டது,எனவே அமைச்சர் பதவியை வாங்க முடியாது என்று கூறி விட்டேன். அதற்கு அவர், நான் பார்க்காதபொதுக்குழுவா, என்று கூறி பதவியைப் பெற்றுத் தருமாறு திரும்பத் திரும்ப வலியுறுத்த ஆரம்பித்தார்.
அவருடன் சேர்ந்து செஞ்சியாரும் எனக்கும் பதவி வேண்டும் என்று கேட்டார். இவர்கள் வற்புறுத்தல் தாங்கமுடியாமல், சரி பிரதம>டம் பேசிப் பார்க்கிறேன் என்று நான் கூறினேன். பிரதமரிடம் பேசியபோதுசோனியாவிடம் பேசுங்கள் என்றார்.
சோனியாவிடம் நான் பேசியபோது, உங்களுக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவியை வாங்கியுள்ளதுஎன்றார். இதை நான் எல்.ஜியிடம் கூறியபோது, அவங்க செஞ்சிருப்பாங்க என்றார்.
சமீபத்திய சட்டசபை தேர்தலில் தனது மகனுக்கு சீட் கேட்டார் எல்.ஜி. கொடுக்க முடியாத நிலை இருந்ததால்,எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். எனது மகனுக்கு சீட் தாருங்கள் என்றார். நான் அப்படிசொல்லாதீர்கள் என்று கூறினேன்.
கட்சிகளை உடைப்பது கருணாநிதிக்குப் புதிதில்லை. முன்பு தீரனை வைத்து பாமகவையும், மணலி கந்தசாமியைவைத்து கம்யூனிஸ்ட் கட்சியையும், லத்தீப்பை வைத்து முஸ்லீம் லீக்கையும் உடைத்தவர் அவர்.
எல்.ஜி., செஞ்சியால் மதிமுகவுக்கு 2 நன்மைகள். ஒன்று 1993ல் இருந்த மதிமுக தொண்டர்களின் எழுச்சிஇப்போது 2006ல் திரும்ப வந்துள்ளது. இன்னொன்று அதிமுகவுடன், மதிமுக கூட்டணி வைத்தது சரிதான் என்றஎண்ணத்தை மக்களிடையே உருவாக்கியது என்றார் வைகோ.
எல்.ஜி. விவகாரத்திற்குப் பிறகு அவரது கோட்டையாக கருதப்படும் தஞ்சைக்கு வைகோ முதல் முறையாகவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications