எல்லோரையும் தூக்குங்க.. அதிமுக வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தத் தொடங்கும் முன் அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்எழுந்து அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில்,

சென்னை மாநகராட்சித் தேர்தல் முறைகேடு மற்றும் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி,உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும்.

மேலும் டிஜிபி முர்ஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதேபோல ஆணையர் லத்திகா சரணையும் நீக்கவேண்டும். கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு அலட்சியத்துடன் நடந்து வருகிறது. மக்கள்பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்காக அறிவித்த பல திட்டங்களை திமுக அரசு நிராகரித்து புறம்தள்ளி விட்டது. இந்தத் திட்டங்களால் 1.99 கோடி விவசாயிகள் பலனடைந்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து விட்டது. வழிப்பறிகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன.அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

உரையை வாசித்து முடித்தவுடன் பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச்செய்தனர். அப்போது முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதியை ராஜினாமா செய்யக் கோரி அதிமுகவினர்கோஷமிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+