ரியாத்: ஓடும் பஸ்ஸில் இந்தியர் தற்கொலை
ரியாத்:செளதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த இந்தியர், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் விரக்தியுற்றுபாட்டிலால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் உள்ளிட்ட விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ரியாத் நகரிலிருந்து அவர் பேருந்தில்பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கையில் இருந்த பாட்டிலை உடைத்து தனது உடலில்சரமாரியாக குத்திக் கொண்டார்.
இந்த சம்பவத்தைப் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டுநர் நேராக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு பேருந்தை செலுத்தினார். அங்கு போலீஸாரிடம் புகார் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு அந்தநபரை கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் தன்னைத் தானே பாட்டிலால் குத்திக் கொள்வதற்கு முன்பு அவரது மனைவி இந்தியாவிலிருந்து பலமுறைஇவருடன் செல்போனில் பேசியுள்ளார். தொடர்ந்து போன் கால்கள் வந்த பின்னரே அவர் பாட்டிலால் குத்திக்கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட அந்த இந்தியருக்கு 30 வயது இருக்கும்.
2006ல் கத்தாரில் 182 இந்தியர்கள் மரணம்:
கத்தார் தலைநகர் தோஹா சிறையில் 10 பெண்கள் உள்பட 29 இந்தியர்கள் வாடி வருகின்றனர். இவர்களில் 2பேர் கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மேல் முறையீட்டு மனுவிசாரணையில் உள்ளது.
இவர்களில் தேவசு ஜோனியாபென், பிலகல், யானா ராஜன், நிதான், சமய் கண்ணன், ஜூபைர் பதிசெர்ரி, சையத்ஆசிம் அப்சல், பக்தி சஞ்சீவ் ஆகிய 8 கைதிகளுக்கு ரம்ஜான் மாதத்தையொட்டி கத்தார் அதிபர் ஷேக் ஹமத்பொது மன்னிப்பு வழங்கினார். இருப்பினும் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
இவர்களைப் போல மேலும் 146 இந்தியர்கள் கத்தார் நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகாரிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைஇந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த ஆண்டு கத்தார் நாட்டில் 182 இந்தியர்கள் இறந்துள்ளதாக இந்தியத் தூதரகம்தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications