நதிகள் இணைப்பு விரைவுபடுத்த அரசு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆற்றிய உரையில்,

இலங்கைத் தமிழர்கள் படும் அவதி தமிழக மக்களுக்கு மிகுந்த கவலை தருகிறது. அந்தக் கவலையில் தமிழகஅரசும் பங்கு கொள்கிறது.

தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தமிழர்களைக் காக்க முதல்வர்கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். மேலும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், மத்திய அரசுக்கும் இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்கள் உரிய நடவடிக்கைஎடுக்க வழிகாட்டினார்.

இலங்கைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் சுமூகத் தீர்வு ஏற்பட தமிழக அரசு விரும்புகிறது. இதன் மூலம்நீண்ட காலமாக அல்லல்பட்டு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு விமோச்சனம் கிடைக்க அரசு விரும்புகிறது.

நதிகள் இணைப்பு:

11வது திட்ட காலத்தில் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தமிழகம் போன்ற தண்ணீர்ப் பற்றாக்குறை கொண்ட மாநிலத்திற்கு இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது.

விவசாயத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமானநடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

நமது நாட்டின் ஒரு பகுதியில் நிரந்தரமாக வறட்சி நிலவுகிறது. இன்னொரு புறத்திலோ, அபரிமிதமானவெள்ளத்தால் பெரும் உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் நடைபெறுகிற விந்தை நிலவுகிறது.

அதிக அளவிலான ஆற்று நீர் கடலில் போய் வீணாகக் கலக்கும் அவலமும் தொடர்வது வேதனை தருகிறது.விவசாயத்திற்காக நாம் பயன்படுத்தும் நீ>ன் அளவு மிகவும் குறைவுதான்.

எனவே நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலவச கலர் டிவி பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2வது கட்டமாக 25 லட்சம் கலர் டிவி பெட்டிகள் பிப்ரவரி15ம் தேதி முதல் வழங்கப்படும். வரும் ஆண்டுகளிலும் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயன் பெற சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதகுடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பும், இணைப்பும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இத்திட்டம்பொங்கல் திருநாள் முதல் ஜனவரி 14ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ரூ. 60 கோடி செலவில், 3 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயுஅடுப்பும், இணைப்பும் வழங்கி அதற்கான வைப்புத் தொகையையும் அரசே செலுத்தும். வரும் ஆண்டுகளிலும்இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+