மந்திரவாதி வீட்டில் கருகி இறந்தவர் துணை நடிகை-நிர்வாண பூஜையில் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள கேரள மந்திரவாதியின் வீட்டு அருகே கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண், ஒருதுணை நடிகை என்பதும், மந்திராவாதி வீட்டில் நடந்த நிர்வாண பூஜையின்போது அவர் தீயில் கருகி இறந்தார்என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மந்திரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம், இளங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில். கேரளாவைச் சேர்ந்தஇவர், சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மந்திர தந்திரம் மாந்த்ரீகம் தெரிந்தவர் என்பதால் இவ>டம் ஏராளமான பேர் தாயத்து கட்டுவதற்கும், பில்லிசூனியம் எடுப்பதற்கும் வருவார்கள். ஓய்வுக்குப் பின்னர் இவர் மாந்த்ஙுகத்தை முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டார்.

நிர்வாண பூஜையும் இவர் செய்வது வழக்கமாம். இவரிடம் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில்வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்தான் இவர் பூஜைகள் செய்வது,பக்தர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்பது என்று செயல்பட்டு வந்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இது பக்கத்து குடிசைகளுக்கும் பரவி பெரும்விபத்தானது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விபத்து குறித்து விசாரிக்க வந்த போலீஸார் தீவிபத்து நடந்த குடிசைப் பகுதியிலிருந்து ஒரு பெண்ணின் கருகியஉடலைக் கண்டுபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது போலீஸாருக்குத் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வியாழக்கிழமை இரவு அமாவாசை என்பதால் அன்று சிறப்பு பூஜைக்கு இஸ்மாயில் ஏற்பாடு செய்தார். அந்தப்பூஜையில் கோடம்பாக்கம் சக்கரபாணி தெருவைச் சேர்ந்த மஞ்சுளாவும் கலந்து கொண்டார். இவர் ஆந்திராவைச்சேர்ந்தவர்.

சென்னையில் தனது தம்பி பாஸ்கர் ராவ் வீட்டில் தங்கியிருந்தார். இவரது கணவர் கோவிந்தசாமி சென்னையில்டிரைவராக இருந்ததால் இங்கு வந்து தங்கியிருந்தார். இவருக்கு ஒரே மகன் ஆனந்த்பாபு. இவர் சில படங்களில்ஹீரோவுக்கு தோழன் வேடத்தில் நடித்துள்ளார். மஞ்சுளாவும் கூட ஒரு துணை நடிகைதான். சில படங்களில்தலையைக் காட்டியுள்ளார்.

1999ம் ஆண்டு கோவிந்தசாமி இறந்தார். இதையடுத்து தனது கணவர் மீண்டும் வர வேண்டும் என்று கோரிஇஸ்மாயிலை அணுகினார். அதற்கு அவர் நான் ஆவிகளுடன் பேசுவது வழக்கம். விரைவில் உனது கணவர்கிடைப்பார் என்று கூறி பல ஆயிரம் ரூபாய் பணத்தைக் கறந்துள்ளார்.

இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஆனந்த் பாபு விபத்தில் இறந்து போனார். இதனால் மஞ்சுளா மனம்உடைந்தார். இஸ்மாயிலை நாடிய அவர் தனது கணவரையும், மகனையும் மீட்டுத் தருமாறு கூறினார். இஸ்மாயில்சொன்னபடியெல்லாம் பூஜைகள் செய்து வந்தார்.

இந்த நிலையில்தான் நிர்வாண பூஜை செய்தால்தான் பலன் கிடைக்கும் என இஸ்மாயில் கூறியுள்ளார்.இதையடுத்து வியாழக்கிழமை அமாவாசை தினத்தன்று நடந்த பூஜையின்போது நிர்வாண பூஜைக்கு தயாரானார்மஞ்சுளா.

யாக குண்டம் முன்பு நிர்வாண கோலத்தில் மஞ்சுளா அமர்ந்திருக்க, இஸ்மாயில் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துத் தன் மீது ஊற்றிக் கொண்டமஞ்சுளா, யாகத் தீயை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டு தீக்குளித்தார்.

இதை பார்த்து அதிர்ந்து போன போலி மந்திரவாதி இஸ்மாயில், மஞ்சுளாவைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.ஆனால் பலன் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார். வீட்டில் பிடித்த தீ அருகில்இருந்த குடிசைகளுக்கும் பரவி விபத்தை ஏற்படுத்தியது.

இஸ்மாயில் இந்தத் தகவல்களை போலீஸா>டம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர் உண்மையை சொல்கிறாரா அல்லது பெண்ணை அவரே எரித்தாரா என்று விசாரணை நடந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+