ரூ. 40 கோடி தங்க கட்டி மோசடி-சேட் கைது
சென்னை:தங்கக் கட்டிகள் வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த பிரபலதொழிலதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர் கவுதம் ராஜ் சுரானா. இவரது தம்பிகள் திணேஷ் சந்த் சுரானா, விஜய்ராஜ் சுரனா, சாந்திலால் சுரானா. இவர்கள் சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் சுரானா டிரேடிங்கார்ப்பரேஷன் என்ற பெயரில்,
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு நகைக் கடைகளுக்கும் இவர்கள் மொத்தமாக தங்கக் கட்டிகளை சப்ளைசெய்து வந்தனர்.
சுரானா அன் கோவின் வியாபாார தந்திரம் இதுதான். உலக தங்க கவுன்சில் விலையை அடிப்படையாக வைத்துத்தங்கக் கட்டிகளைக் தருவதாக தங்களது இணைய தளத்தில் கூறுவர் சுரானா சகோதரர்கள். இதைப் பார்க்கும்நகைக் கடை அதிபர்கள், மூலம் தங்களுக்குத் தேவையான தங்கக் கட்டிகளுக்கு ஆர்டர் கொடுப்பர்.
அவர்களின் கோரிக்கைக்கேற்ப தங்கக் கட்டிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் சுரானா சகோதரர்கள், தங்கக்கட்டிகளை கொடுப்பதற்கு முன்பாகவே அதற்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர்.
ரொக்கமாகவும், டிடி மூலமும் இந்தப் பணம் கைமாறும். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்ட சுரானாசகோதரர்கள் யாருக்கும் தங்கம் கொடுப்பதில்லையாம். மாறாக மோசடி செய்துள்ளனர்.
இன்டர்நெட் மூலமாக இந்த தங்க வியாபாரம் முற்றிலும் சட்ட விரோதமானது என்பதால் சுரானா சகோதரர்கள்மீது புகார் கொடுக்க முடியாமல் தவித்தனர் நகைக் கடை உரிமையாளர்கள்.
இதைப் பயன்படுத்தி கவுதம் ராஜ் சுரானா கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து சம்பாதித்துள்ளார். பணம்கேட்டவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.
இந் நிலையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் வினோத் என்பவர் சென்னை மத்தியகுற்றப் பிரிவு போலீஸில் சுரானா மீது புகார் கொடுத்தார். தன்னிடம் ரூ. 2 கோடி பணத்தை வாங்கிக் கொண்டுகவுதம் ராஜ் சுரானா ஏமாற்றி விட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சுரானாவை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தியவிசாரணையில் தமிழகம் முழுவதும் ரூ. 40 கோடி வரை, 50க்கும் மேற்பட்ட நகைக் கடை உரிமையாளர்களிடம்மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
சுரானா மீது மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்ற இன்னொரு சேட்டும் புகார் கொடுத்துள்ளார்.தன்னிடம் ரூ. 1.25 கோடியை சுரானா மோசடி செய்து விட்டதாக அவர் புகார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications