பேட்டரி காரில் கருணாநிதி-பகவத்கீதை பரிசு!
சென்னை:சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை முதல்வர் கருணாநிதி பேட்டரி காரில் அமர்ந்தபடிபார்வையிட்டார்.
தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பச்சையப்பன் கல்லூரிமைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 30வது ஆண்டாக நடந்து வரும் இந்தக் கண்காட்சியில் 5கோடி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்ததோடுபதிப்பாளர்கள், எழுத்தாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி நிதியையும் வழங்கினார்.
இந் நிலையில் நேற்று அவர் புத்தக கண்காட்சிக்கு திடீரென அவர் வந்தார். கண்காட்சி நடப்பது மிகப் பெரியமைதானம் என்பதால் பேட்டரி காரில் அமர்ந்தபடி கண்காட்சியை அவர் சுற்றிப் பார்த்தார்.
கண்காட்சியின் முதல் அரங்காக இடம் பெற்றுள்ள கலைஞர் அறிவுக் கூடத்தில் நுழைந்த அவர் அங்குவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
கருணாநிதி சிறு வயதிலிருந்து எழுதிய நூல்கள் அத்தனையும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. கட்டுரை, கவிதை,உரைநடை, நாடகம் என பல தரப்பிலான பொருட்களில் கருணாநிதி எழுதியிருந்த நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர பிற தலைவர்களுடன் கருணாநிதி இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இவற்றைப் பார்வையிட்ட கருணாநிதி மலரும் நினைவுகளில் மீழ்கி அந்த நினைவுகளை தன்னுடன்வந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
1963ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அண்ணா எம்.பியாக இருந்தபோது டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு எழுதியகடிதமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள. அந்த கடிதத்தை கருணாநிதி நிதானமாக முழுவதுமாக படித்துப்பார்த்தார்.
1942ம் ஆண்டு திருவாரூர் கிருஷ்ணா அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல் முரசொலி இதழின் பிரதியைப் பார்த்தார்கருணாநிதி. அப்போது கருணாநிதியுடன் வந்திருந்த வைரமுத்து அதில் முதலில் இருந்த இரண்டு வரிகளைப்படித்தார். பின்னர் மற்ற வ>களை கருணாநிதி அப்படியே சொல்ல ஆரம்பிக்க, அவரது நினைவாற்றலைப் பார்த்துஅருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.
பின்னர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி பிற தலைவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள்குறும்படமாக தயாரிக்கப்ப்டிருந்தது. அந்தப் படத்தை அவர் அமர்ந்து பார்த்தார்.
பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி ஒவ்வொரு அரங்கமாக சென்று என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதைகேட்டறிந்தார். பல அரங்கங்களில் கருணாநிதிக்கு பல நூல்களை பரிசாக வழங்கினர். பகவத் கீதையும் பரிசாகஅளிக்கப்பட்டது.
கருணாநிதியுடன் அமைச்சர் துரைமுருகன், திரைப்படத் தயா>ப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், கவியரசுகண்ணதாசனின் மகனும், புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத் தலைவருமான காந்தி கண்ணதாசன்ஆகியோரும் உடன் சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் புத்தகக் கடலில் மூழ்கி முத்துக்குளித்த கருணாநிதியைப் பார்த்து புத்தக் கண்காட்சிக்குவந்திருந்த பலரும், இருக்கு வயசு நிஜமாவே 84 தானா என்று சந்தேகப்பட்டதை பார்க்க முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications