ராணுவத்துடன் புலிகள் தொடர்ந்து மோதல்
கிளிநொச்சி:வாகரை சண்டையில் இழப்பை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து ராணுவத்தை எதிர்த்துதீரமுடன் எமது வீரர்கள் போ>ட்டு வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் இயக்கசெய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறியுள்ளார்.
இலங்கையின் கிழக்கில் உள்ள முக்கிய கடலோர நகரான வாகரையை பிடித்துள்ளதாகஇலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த நகரம்விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வாகரையில் பெரும் இழப்புகளை சந்தித்திருந்தாலும் கூட போரிடும்பலம் இன்னும் குறையவில்லை, தொடர்ந்து ராணுவத்தை எதிர்த்து கடுமையாகபோ>ட்டு வருவதாக புலிகள் தெரிவித்தள்ளனர்.
இதுகுறித்து புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன்கிளிநொச்சியில் கூறுகையில், எங்களது போர்க்களம் மாறியிருக்கலாம். ஆனால் போர்வேகம் குறையவில்லை. தொடர்ந்து போ>ட்டு வருகிறோம்.
திரிகோணமலையில் நாங்கள் இன்னும் பலவீனப்பட்டு விடவில்லை என்றார் அவர்.வாகரையை ராணுவம் கைப்பற்றி விட்டாலும் கூட இன்னும் பல கிலோமீட்டர்தொலைவுக்கு ராணுவம் உள்ளே வர வேண்டியுள்ளது. அங்கெல்லாம் விடுதலைப்புலிகள் தொடர்ந்து கடுமையாக மோதி வருவதாக கூறப்படுகிறது.
வாகரை சண்டை காரணமாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்துதப்பி தெற்கு நோக்கி நகர்ந்து வருகின்றனர். காடுகள் வழியாகவும், ஆறுகள்வழியாகவும் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் மட்டக்களப்பில் உள்ள மீட்புமுகாம்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.
பள்ளிகளில் இவர்கள் தங்க தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை25,000 மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications