சட்டசபையில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதிக்க மறுத்ததற்கு எதிர்ப்புதெரிவித்து அதிமுகவும், மதிமுகவும் இன்று வெளிநடப்புச் செய்தன.
சட்டசபை இன்று காலை கூடியதும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, சென்னை மாநகராட்சிதேர்தல் வன்முறை தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதிக்கமறுத்தார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசினர். இந்த நிலையில், அமைச்சர்கள் அன்பழகன்,ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் எழுந்து மாநகராட்சி தேர்தல் குறித்து சில விளக்கங்களை அளித்தனர்.
அதற்கு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், ஆளுங்கட்சியினருக்கு மட்டும் பேச அனுமதிப்பதா என்றுகூறி அதிமுக வெளிநடப்புச் செய்வதாக கூறி விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள்வெளிநடப்புச் செய்தனர்.
இதே பிரச்சினைக்காக மதிமுகவும் வெளிநடப்புச் செய்தது. பின்னர் சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம்பேசுகையில், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தடுத்து நிறுத்த தனது சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது
எனவே முதல்வர் கருணாநிதி, டிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், கூடுதல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோர்பதவி விலக வேண்டும்.
இதே அதிகாரிகளை வைத்து மீண்டும் தேர்தல் நடத்தினால் அது நியாயமாக நடைபெறுமா என்பதுதான் ஜெயலலிதாவின்கேள்வி. மீண்டும் வன்முறை ஏற்படாது என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது என்றார்.
மதிமுக தலைவர் கண்ணப்பன் கூறுகையில், முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கத்தில் உள்ள 8 வட்டங்களில் 7வட்டங்களில் வன்முறை நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கருணாநிதி, முதல்வர் பதவியை மட்டுமல்லாது, எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications