ரிமோட் விமானம் மூலம் தலைவர்களுக்கு குறி!
டெல்லி:உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ரிமோட் கண்ட்ரோலில்இயங்கும் பொம்மை விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்திதலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுக்கிடும்தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில்சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி அரசியல்தலைவர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர நாச வேலைகளில் ஈடுபட்டு தேர்தல்பிரசாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
குறிப்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய்ஆகியோரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என த் தெரிய வந்துள்ளது.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானங்களில் வெடிகுண்டுகளைவைத்து அவற்றின் மூலம் தலைவர்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இத்தகைய விமானங்களில் 15 கிலோஎடை கொண்ட வெடிபொருட்களை ஏந்திச் செல்ல முடியும்.
பிரசாரக் கூட்டங்கள், மேடைகள், தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,பேரணிகளில் இந்த பொம்மை விமான குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குக் கிடைத்துள்ள தகவல்கள்தெரிவிக்கின்றன.
இத்தகைய விமானங்களை கடந்த 1999ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதுதவிர தற்கொலைப் படைத்தாக்குதல்களும் நடைபெறலாம் என உளவுத் துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த பயங்கர சதித் திட்டம் வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில்ஈடுபடும் தலைவர்களுக்கு பாதுகாப்பை பலமடங்கு அதிகரிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications