கர்நாடக இசை விழாவை கட் செய்த முதல்வர்
சென்னை:தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கர்நாடக சங்கீதவிழாவுக்கு, பாமக மற்றும் திமுக. தலைவர் கி.வீரமணி ஆகியோர் எதிர்ப்புதெரிவித்ததால் அந்த விழாவை ரத்து செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
தமிழக சுற்றுலாத்துறை செயலாளர் வெ. இறையன்பு சமீபத்தில் மியூசிக் அகாடமிபோன்ற சபாக்கள் கர்நாடக சங்கீத விழாக்களை நடத்துவது போல தமிழக அரசின்சுற்றுலாத்துறையும் கர்நாடக சங்கீத விழாவை நடத்தும் என அறிவித்திருந்தார்.
இதற்கு பாமக தரப்பில் அதிருப்தி தெரிவித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வநாளேடான தமிழ் ஓசையில் கட்டுரை வெளியிடப்பட்டது.
இதேபோல, மலேசியா சென்றிருந்த தி.க. தலைவர் கி.வீரமணியும் முதல்வர்கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் கர்நாடக இசைவிழாவை நடத்தத் தேவையில்லை. தமிழிசை விழாவுக்குத்தான் தமிழக அரசுமுக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வெளிநாடு கிளம்பிக் கொண்டிருந்த இறையன்புவைத் தொலைபேசியில்பிடித்த முதல்வர், கர்நாடக சங்கீத விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து கர்நாடக சங்கீத விழாவை நடத்தும் முடிவை சுற்றுலாத்துறை டிராப்செய்து விட்டதாம்.












Click it and Unblock the Notifications