தமிழக அரசுக்கு சாய்பாபா துணை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தின் கண்ணீரைத் துடைக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சாய்பாபா துணையாக இருக்கிறார்.அவரிடம் உதவி கேட்பதில் தவறில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கிருஷ்ணா நதி நீர்த் திட்டக் கால்வாயை ரூ. 200 கோடி மதிப்பில் செப்பனிட்டு கொடுத்ததற்கு நன்றிதெரிவிக்கும் வகையில் சாய்பாபவுக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் கருணாநிதி, சாய்பாபா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக்,மகாராஷ்டிர ஆளுநர் கிருஷ்ணா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், ஆன்மீகவாதியான பாபாவும், அரசியல்வாதியான நானும் இந்தவிழாவிலே பங்கேற்பது பலருக்கு ஆச்சரியமூட்டும். இதில் ஆச்சரியத்திற்கு ஒன்றும் இல்லை. காரி>யும்,கொள்ளிடமும் ஒன்றாகப் போவது எப்படி ஆச்சரியமில்லையோ அதைப் போலத்தான் இதுவும்.

தனித் தனி பெயர்களில் இருந்தாலும் இரண்டிலும் ஓடுவது தண்ணீர்தான். அதிலிருந்து பாயும் தண்ணீர்விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் நெல் விளைந்து அரிசியாய் நமக்குக் கிடைக்கிறது.காவிரியும், கொள்ளிடமும் போல நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம்.

தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களில் நதிகள் ஓடினாலும், தண்ணீர் சூழ்ந்த தீபகற்பமாக தமிழகம் இருந்தாலும்,தண்ணீருக்காகக் கண்ணீர் விடும் நிலையில்தான் நாம் உள்ளோம்.

ஒருபக்கம் ஆந்திராவின் தயவு இல்லாவிட்டாலும், மறுபக்கம் கர்நாடகத்தின் தயவு இல்லாவிட்டாலும்தமிழகத்திற்குத் தண்ணீர் இல்லை. இன்னொரு பக்கம் கேரளாவின் தயவும் தேவையாயிருக்கிறது.

இப்படி நான்கு பக்கமும் வேடர் சூழ, நடுவில் சிக்கிய மான் போல, தமிழகத்தைச் சுற்றிலும் உள்ள மாநிலங்கள்,நடுவே கண்ணீர் வடிக்கும் மாநிலமாக தமிழகம். இந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் அரசு முயற்சி எடுத்துவருகிறது. தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்கு அருந்துணையாக சாய்பாபாவும் விளங்குகிறார்.

கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்சினையே அல்ல. கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர்என்னை ஏற்றுக் கொள்ளும்படி நான் நடக்கிறேனா என்பதுதான் முக்கியம்.

நான் நல்லவனாக நடந்து கொண்டால், கடவுள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர் ஏற்றாலும்ஏற்காவிட்டாலும், மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள்.

கடவுள் இருந்தால், அவர் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதை நமதுசெயல்கள் காட்ட வேண்டும்.

பாபா என்னைப் பல வருடங்களாக எனக்கே தெரியாமல் கவனித்துக் கொண்டுதான் உள்ளார். நானும்,அவருக்குத் தெரியாமல் அவரை பல வருடங்களாகவே கவனித்துக் கொண்டுதான் உள்ளேன்.

பாபா என்னிடம் கேட்டார், நீங்களும் இந்த மஞ்சள் துண்டை 8 வருடமாக போட்டிருக்கிறீர்கள். யார் எதுசொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் விடாப்பிடியாக போட்டு வருகிறீர்களே என்றார்.

அதற்கு நான் சொன்னேன், புத்தருடைய அங்கவஸ்திரமே மஞ்சள் துண்டுதான் என்றேன். அவர் சிரித்துக்கொண்டார்.

சென்னையில் ஓடும் கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் கருத்தை பாபாவிடம் கூறினேன். சென்னை நகரை எழில்நிறைந்த நகராக்க வேண்டும் என்பதால் உருவான ஆசை இது.

பாபா இலவசமாக பல உதவிகளை அளித்துள்ளார், கல்வியையும் அளித்துள்ளார் என்றார்கள். அங்கேயும்இலவசம்தான், இங்கேயும் இலவசம்தான். ஆனால் இங்கே அதிகமாக கொடுத்தால் அரசு திவாலாகி விடும்என்கின்றனர். திவாலாக மாட்டோம்.

எடுக்க எடுக்க அன்பு குறையாது. அன்பு குறையவில்லை என்றால் அஸ்திரம் குறையாது. அந்தநம்பிக்கையோடுதான் சாய்பாபா பணியாற்றி வருகிறார். அதைத்தான் அவர் ஆண்டவன் பணி என்கிறார்.இதைத்தான் நான் ஆள்கிறவன் பணி என்று கருதுகிறேன்.

இரு பணிகளுக்கும் ஏறத்தாழ இருக்கின்ற ஒற்றுமை என்னவெனில், இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்குவது,அதில் எந்தத் தவறும் இல்லை என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் கிரிக்கெட்வீரர்கவாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+