கிட்னி திருட்டு-சிக்கும் மதுரை மருத்துவமனைகள்!
மதுரை:சென்னையில் பெண்களிடம் சிறுநீரகங்களை சட்டவிரோமாக எடுத்த விவகாரம்தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நான்கு மருத்துவமனைகளில் போலீஸார் அதிரடிவிசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஏழை மீனவப் பெண்களைஏமாற்றி, குறைந்த அளவில் பணம் கொடுத்து அவர்களின் சிறுநீரகங்களைசட்டவிரோதமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி லட்சக்கணக்கில் விற்றுசம்பாதித்த கும்பல் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சிறுநீரக திருட்டு குறித்து எந்தப் பெண்ணும் புகார் கொடுக்காத நிலையில்தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் மட்டும் புகார் கொடுத்தார்.இதையடுத்து இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் வழக்கு விசாரணையைத்தொடங்கினர்.
இப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசா>த்து வருகின்றனர்.மல்லிகாவுக்கு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2004ம் ஆண்டுஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த மருத்துவமனையில், சிபிசிஐடி போலீஸார் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர்.மேலும் உதவி ஆணையர் தங்கராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும் விசாரணைமேற்கொண்டுள்ளது.
இந்தத் தனிப்படை கே.கே.நகர், அண்ணா நகர், மாட்டுத்தாவணி ஆகிய இடங்களில்உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. அங்குகடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சிறுநீகர அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்களைஅவர்கள் சேகரித்துள்ளனர்.
மேலும், அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்களிடமும் தீவிர விசாரணைநடத்தப்பட்டது. அப்போது, அவ்வளவு எளிதாக சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துவிட முடியாது, ஏராளமான விதிமுறைகள் உள்ளன என்பதை டாக்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை எழுத்துப் பூர்வமாக போலீஸார் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, மல்லிகாவை அழைத்து வந்த கும்பல், அவரை சிவகாமி என்றபெயரில் மதுரை மருத்துவமனையில் அனுமதித்து சிறுநீரகத்தை எடுத்துள்ளதாகபோலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மல்லிகா அந்த மருத்துவமனையில் கிட்டத்தட்ட 20 நாட்கள் இருந்துள்ளார். அவ>டம்ரூ. 30,000 மட்டுமே கொடுத்துள்ளனர். ஒரு லட்சம் தந்து விட்டதாக ஏமாற்றி எழுதிவாங்கி விட்டனர்.
மல்லிகா தொடர்பான எந்த ஆவணமும் மருத்துவமனையில் இல்லை. ஆனால்சிவகாமி, சென்னை என்ற பெயர் மட்டும் உள்ளது. எனவே மல்லிகாவின்பெயரைத்தான் சிவகாமி என்று கூறி மோசடி செய்திருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
மல்லிகாவிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீகரத்தை இலங்கைத் தொழிலதிபருக்குபொருத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தீவர விசாரணை நடத்தசிபிசிஐடி போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
விரைவில் சிபிசிஐடி டிஎஸ்பி பவானீஸ்வரி மதுரை வரவுள்ளார். அவர் வந்த பிறகுஇந்த விசாரணை சூடு பிடிக்கும் எனத் தெ>கிறது. தவறு செய்ததாக தெரிய வரும்மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications