திமுக-பாமக மோதல் தீவிரமாகிறது!!
சென்னை:தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கோவில்கள் அருகே கஞ்சா விற்பனைஅமோகமாக நடந்து வருவதாக சட்டசபையில் இன்று பாமக கடுமையாக குற்றம்சாட்டியது. போலீஸாரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2ம் தேதிபோராட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் திமுக அரசுக்கு எதிராக நேரடியாக போராட்டத்தில் குதித்துள்ளார்ராமதாஸ்.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்தவிவாதத்தில் பங்கேற்று பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசினார். அப்போதுதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி,கோவில்கள் அருகே கஞ்சா,அபின் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாககாவல்துறையில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. பாமக நிறுவனர்ராமதாஸும் இதுகுறித்து போலீஸுக்கு வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்றார்.
அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, இதுதொடர்பாக டாக்டர்ராமதாஸ் விடுத்த அறிக்கையைப் பார்த்த பின்னர் காவல்துறை அதிகாரிகளுடன்தொடர்பு கொண்டு விபரம் கேட்கப்பட்டது. ஆனால் போதைப் பொருள் விற்பனைஎதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.
ஒரு வேளை எங்காவது விற்பதாக தெரிய வந்தால், தகவல் தரப்பட்டால் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் வேல்முருகன் பேசுகையில், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஒரு கல்லூரிமாணவரை அனுப்பி கஞ்சா வாங்கி வரச் சொன்னபோது அவர் கஞ்சாவுடன்,அபினையும் சேர்த்து வாங்கி வந்தார். இதை ஆதாரப்பூர்வமாக நாங்கள் நிரூபிக்கமுடியும்.
இன்று கூட ஒரு பத்திரிக்கையில் போதைப் பொருள் விற்பனை குறித்து செய்திவந்துள்ளது. கடந்த ஆட்சியிலிருந்து இதுபோல தொடர்ந்து நடந்து வந்திருக்கலாம்என்றார்.
இதுதவிர சிறுநீரக திருட்டு தொடர்பாகவும் பரபரப்பு செய்திகள் வருகின்றன.இத்தகைய திருட்டில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இதுபோல தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் தொடர்ந்துவிற்கப்பட்டு வருகின்றன. இதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
எஸ்.எம்.எஸ். மூலம் கேவலமான, அசிங்கமான செய்திகள் இளைஞர்களிடையேபரிமாறப்பட்டு வருகிறது. இதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
டிவி, சினிமா மூலம் கலாச்சார, பண்பாட்டு சீரழிவு அமோகமாக நடக்கிறது. இதைமுதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களைக் கேவலப்படுத்தும்,உறவுமுறைகளைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன.அத்தகைய தனியார் டிவி உரிமையாளர்களைக் கூப்பிட்டு முல்வர் கண்டிக்க வேண்டும்என்று வேல்முருகன் அடுக்கிக் கொண்ட போக ஆளுங்கட்சி தரப்பில் பெரும்சலசலப்பு நிலவியது.
ராமதாஸ் போராட்ட அறிவிப்பு:
இதற்கிடையே கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே கஞ்சா, அபின்போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி பிப்ரவ> 2ம்தேதி தமிழகம் முழுவதும் காவல்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனடாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்பாமகவில் இணையும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்னர் ராமதாஸ்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அருகே கஞ்சா விற்பனை சீரும்,சிறப்புமாக நடந்து வருகிறது. இதேபோல சென்னை நகரின் குடிசைப் பகுதிகளில்பாக்கெட் சாராய விற்பனை கன ஜோராக நடக்கிறது.
இதைத் தடுக்க காவல்துறை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேபோலீஸைக் கண்டித்து பிப்ரவர 2ம் தேதி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வரும் 27ம் தேதி சென்னையில் தமிழின மான மீட்பு இயக்கம் நடத்தவுள்ளோம்என்றார் ராமதாஸ்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கடுமையாக மோதினார் ராமதாஸ். திமுகபச்சைத் துரோகம் செய்து விட்டதாக படு ஆவேசமாக பேசினார்.
அவ்வப்போது பத்திரிக்கையாளர்களிடம் முதல்வர் கருணாநிதியை வெளிப்படையாகவிமர்சித்து வந்த ராமதாஸ், சென்னை துணை நகர பிரச்சனையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஒரே மேடையில் தோன்றினாலும் கருணாநிதியும் ராமதாசும் பேசிக்கொள்ளாமலேயே கிளம்பிச் சென்ற காட்சியும் நடந்தது.
இந் நிலையில் திடீரென கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசி இருவரும்ராசியாக இருப்பதாக காட்சி அரங்கேறியது.
இருப்பினும் திமுகவுடன் பாமக தொடர்ந்து உரசல் போக்கில் இருப்பதையே இன்றுசட்டசபையில் பாமக உறுப்பினர் வேல்முருகன் பேசியதும், ராமதாஸின் போராட்டஅறிவிப்பும் வெளிப்படுத்துவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications