வெற்றி-தரையிறங்கியது இந்தியாவின் எஸ்ஆர்இ!
சென்னை:3 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் கேப்சூல்ரெக்கவரி சோதனை சாதனம் (எஸ்.ஆர்.இ) 11 நாட்கள் விண்ணில் சுற்றிய பின் இன்று வெற்றிகரமாக கடலில்தரையிறங்கியது. அதை நடுக்கடலில் மீட்ட விஞ்ஞானிகள் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
பிஎஸ்எல்வி மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் ரெக்கவரி எக்யூப்மெண்ட் (எஸ்.ஆர்.இ)எனப்படும் விண்வெளிக் கலம் கடந்த 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
![]() |
22ம் தேதி (இன்று) பூமிக்கு திரும்பும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி அந்தக் கலம்பாராசூட் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு வங்கக் கடலில் பத்திரமாக தரையிறங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து கிழக்கே 140 கிமீ தொலைவில் கடலில் அது தரையிறங்கியது.
இப்போது தான் இந்தியா முதன் முறையாக எஸ்.ஆர்.இயை வடிவமைத்து விண்ணுக்கு அனுப்பியது. 550 கிலோஎடை கொண்ட இந்த கேப்சூல் 11 நாட்கள் பூமியை சுற்றி வந்தது. விண்ணில் 625 கி.மீ. உயரத்தில் அது சுற்றிக்கொண்டிருந்தது.
பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின் இன்று மீண்டும் பூமிக்குள் நுழைந்தது. அதில் உள்ள 4 சிறியராக்கெட்டுகள் அதை பூமிக்குள் நுழைய உதவின. இதையடுத்து பூமிக்குள் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில்நுழைந்தது எஸ்ஆர்இ. கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. உயரத்தை அடைந்தவுடன் அதன் 3 பாராசூட்களும்விரிந்தன.
இதையடுத்து அதன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, மணிக்கு 36 கி.மீ. வேகத்தில் வங்கக் கடலில் தரையிறங்கியது.இதை பத்திரமாக மீட்க கடலோர காவல் படையினரும் ஹெலிகாப்டர்களும் அந்தப் பகுதிக்கு விரைந்தன. சரங்என்ற கப்பலில் சென்ற கடலோர காவல் படையினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் அந்த கலத்தை பத்திரமாகமீட்டனர்.
பின்னர் அது சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பத்திரமாக பூமிக்கு திரும்பக் கொண்டு வரும்தொழில்நுட்பத்தை இந்தியாவும் அடைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications