ஒரே கயிற்றில் அக்கா, தங்கை தூக்கு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:திருமணம் தங்களைப் பிரித்து விடுமே என வேதனைப்பட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அக்காவும்,தங்கையும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

ராயபுரத்தைச் சேர்ந்த கேவசராம் என்பவ>ன் மகள் குமரேஸ்வரி. 22 வயதாகும் இவர் பட்டப் படிப்பு முடித்தவர்.அதே பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவரது மகள் பெயர் மீனு. இவருக்கு வயது 20.

இருவரும் ஒன்று விட்ட சகோதரிகள். சிறு வயது முதலே இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர். ஒருவரை விட்டுஒருவர் பிரிய மாட்டார்களாம்.

இந் நிலையில் குமரேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதை அறிந்த அக்காவும், தங்கையும் கவலைஅடைந்தனர்.

திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்று விட்டால், மீனுவைப் பிரிய வேண்டுமே என குமரேஸ்வ>கவலைப்பட்டார். அதே கவலைதான் மீனவுக்கும்.

இதற்கு ஒரு முடிவு கட்ட இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முட்டாள்தனமான முடிவுக்குவந்தனர். நேற்று இரவு 10.30 மணியளவில் மீனு வீட்டுக்கு குமரேஸ்வரி சென்றார். அப்போது வீட்டில் யாரும்இல்லை.

வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்ட இருவரும் மின் விசிறியில் நைலான் கயிற்றை மாட்டி, அதில் சேர்ந்துதூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக இறந்தனர்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சந்திரமோகன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அக்காவும், தங்கையும்ஒரே கயிற்றில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் கேசவராம்குடும்பத்தினரும் ஓடி வந்து கதறினர்.

ராயபுரம் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+