அவதூறு வழக்கு-நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
சென்னை:திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று எழும்பூர்தலைமைப் பெருநகர நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.
மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை விமர்சித்து வைகோ பேட்டி அளித்திருந்தார். இதையடுத்துதமிழக அரசின் சார்பில் வைகோ மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் சமீபத்தில் வைகோ நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல திமுக சார்பில் எழும்பூர் தலைமைப்பெருநகர நீதிமன்றத்தில் வைகோ மீது ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கிலும் வைகோ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வைகோ இன்று நேரில் ஆஜராகி விளக்கம்அளித்தார்.
அதன் பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு சென்னைமாநகராட்சித் தேர்தலில் வன்முறையை நடத்தி முடித்துள்ளனர். அதற்கு போலீஸையும் பயன்படுத்தியுள்ளனர்.
அதனால்தான் டிஜிபி, மாநகர காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றுகோருகிறோம். அவர்களை டிரான்ஸ்பர் செய்யக் கூடாது. மாறாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இதற்குப் பொறுப்பேற்று கருணாநிதியும், ஸ்டாலினும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications