கூட்டணி ஆட்சி?: இன்று மொய்லி ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத்தியில் உள்ளதைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்குஅமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன்நேரடியாக கோரிக்கை வைத்தார்.

சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தில் வேலூர் எம்.எல்.ஏ. ஞானசேகரன் பேசுகையில், மத்தியில் கூட்டணிஆட்சி அமைந்துள்ளது. அதேபோல கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கூட்டணிஆட்சிதான் உள்ளது.

அதுபோலவே தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியை முதல்வர் ஏற்படுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்குஅமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்றார். இந்தக் கோரிக்கையால், திமுக உறுப்பினர்கள் மத்தியில்பரபரப்பு ஏற்பட்டது.

வீரப்ப மொய்லி திடீர் வருகை:

கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழககாங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி இன்று சென்னைக்கு வருகிறார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்ப மொய்லி சென்னைவருகிறார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்துப் பேசுகிறார்.

பின்னர் மறு நாள் காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் முக்கியநிர்வாகிகளை சந்தித்துப் பசுகிறார்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் விடுத்த கோரிக்கைகளை ஏற்றுமுதல்வர் உத்தரவிட்டு வருகிறார். மீனவர் நல வாரியம் கோரினோம். அதை அறிவித்துள்ளார். அதற்காக அவரைபாராட்டுகிறோம் என்றார்.

கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவே வீரப்ப மொய்லி சென்னை வருவதாககாங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கூட்டணிக்கு ஆட்சிக்கு திமுகவும் தயாராகி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+