சில நீதிபதிகளின் அவசர தீர்ப்பு: கருணாநிதி
சென்னை:விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனின் திருமணத்தைஎனது தலைமையில், அனைவரும் சேர்ந்து இந்த ஆண்டுக்குள் நடத்தி வைப்போம்என முதல்வர் கருணாநிதி கூறினார்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மகன் முகிலன் திருமண விழாஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடுவீராசாமி, திருமாவளவன், கி.வீரமணி, நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் கிருஷ்ணன், அசோக்குமார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில்,
உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் இங்கு பேசுகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகுதிருமணத்தை நடத்தி வைக்க வந்திருப்பதாக கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். சொல்ல வந்ததை அவசரத்தின் காரணமாக அவர் மாற்றிச் சொல்லிவிட்டார்.
இப்பொழுதெல்லாம் சில நீதிபதிகள் அளிக்கும் அவசரத் தீர்ப்பு உங்களுக்குத்தெரியும். ஆனால் கிருஷ்ணன் அப்படிப்பட்டவர் இல்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞரைச் சந்திக்க வந்துள்ளேன் என்பதைத்தான்அவர் மாற்றிச் சொல்லி விட்டார்.
இந்த ஆண்டு மாப்பிள்ளையாகப் போகிற திருமாவளவனின் திருமணம் குறித்துஇங்கே பேசப்பட்டது. ஒன்று பேசப்பட்டாலே அது பிரகடனப்படுத்தப்பட்டதாகத்தான்அர்த்தம்.
எனவே இதை திருமாவளவனின் திருமண நிச்சயதார்த்த விழாவாக நான் கருதுகிறேன்.
பெண் எங்கே என்று கேட்டால், அது அவர் பாடு. ஒரு வேளைத் தேடிக்கொண்டிருப்பார் அல்லது தேடி வெற்றி பெறுவார்.
நாமெல்லாம் சேர்ந்து திருமாவளவன் திருமணத்தை இந்த ஆண்டே நடத்திவைப்போம். அவருடைய தந்தையாரும், தாயாரும் என் வீட்டுக்கு வந்தனர். அவரதுஊரான திட்டக்குடி எனக்குத் தெரிந்த ஊர்தான். அங்கு பலமுறை போய் கூட்டங்களில்பேசியுள்ளேன். ஒரு நெடிய குடும்ப உறவு திருமாவுக்கும், எனக்கும் உண்டு.
இடையில் சில அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் கூட,திருமாவளவன் மற்றவர்களைப் போல நடந்து கொள்ளவில்லை என்பதும்,பண்போடு, நாகரீகத்தோடு அரசியல் கோட்பாடு தவிர வேறு அநாவசியமாக எந்தக்கருத்துக்களையும் சொல்லாமல் திமுகவோடு உறவாடியவர்.
அதனால்தான் இன்றைக்கு அவர் நம்மோடு ஒன்றிக் கலந்து நம்முடையஉடன்பிறப்புகளில் ஒருவராக திகழ முடிகிறது. அப்படிப்பட்ட திருமாவின் தந்தையும்,தாயும் என்னை சந்தித்தபோது அவருடைய தாயார் எனது கைகளைப் பிடித்துக்கொண்டு, அய்யா, நாங்கள் உங்களையே நம்பியிருக்கிறோம் என்றார்கள்.
என்னம்மா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாட்டில் எத்தனையோதிருமணங்களை செய்து வைத்திருக்கிறீர்கள். எனது மகனுடைய திருமணத்திற்கு என்னசொல்கிறீர்கள் என்றார். கவலைப்படாதீர்கள் அம்மா, அது என பொறுப்பு என்றுசொல்லியிருக்கிறேன்.
திருமாவளவனுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும், நாங்களும் சேர்ந்து தான்தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளைநிறைவேற்றுகிற பொறுப்பு நமக்கு இருக்கிறது. உங்கள் சாட்சியாக நான் வாக்குகொடுத்திருக்கிறேன்.
அதை நிறைவேற்றி தாயார், தந்தையார் இருவருடைய கவலையையும் போக்கவேண்டும் என்று இந்த திருமண விழா சாட்சியாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்கருணாநிதி.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடுவீராசாமி, திருமாவளவன், கி.வீரமணி, நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் கிருஷ்ணன், அசோக்குமார், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications