யாழ்ப்பாணத்தில் குண்டுகள் வெடிப்பு-பலர் பலி
யாழ்ப்பாணம்:ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இன்று அடுத்தடுத்து 2 பைக் குண்டுகள் வெடித்தன. இதில்பலர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. வாகரையைப் பிடித்துள்ள ராணுவம்வெருகல் உள்ளிட்ட மேலும் இரு முக்கிய நகரங்களைப் பிடிக்க தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ராணுவத்தின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுகள்வெடித்தன. மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிவெடிக்க வைக்கப்பட்டன.
இதில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர். ஆனால், உயிர்ச் சேதம் அதிகம் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு:
இந் நிலையில் வாகரை நகரில் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கிட்டங்கியை கண்டுபிடித்துள்ளதாகராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெகேலியா ரம்புகவெல்லா கூறுகையில், வாகரைமற்றும் வெருகல் பகுதியில் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் கிட்டங்கியைராணுவம் கண்டுபிடித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் மிகப் பெரிய ஆயுத பறிமுதல் ஆகும். 2, 152 மில்லி மீட்டர் நீள துப்பாக்கிகள்2, 122 மில்லி மீட்டர் துப்பாக்கிகள், 2 12.7 மில்லி மீட்டர் துப்பாக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைவிமான எதிர்ப்பு துப்பாக்கிககள் ஆகும். இதுதவிர டி56 ரக துப்பாக்கிகள் 360ம் மீட்கப்பட்டுள்ளன என்றார்அவர்.
இதற்கிடையே வாகரையை இழந்த விடுதலைப் புலிகள் தெற்கு இலங்கையில் மிகப் பெரிய தாக்குதலில்ஈடுபடலாம் என இலங்கை ராணுவம் அஞ்சுகிறது. இதையடுத்து ராணுவக் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தாடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
வாகரை, வெருகல் பகுதியில் நடந்த தொடர் ராணுவத் தாக்குதல் காரணமாக 42,000தமிழர்கள் பாதுகாப்பானபகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீண்டும் பழையஇடங்களிலேயே குடியமர்த்தப் போவதாகவும் அரசு கூறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications