சித்துவுக்கு தண்டனை-சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:கொலை வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றஉச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அவர் ராஜினாமா செய்த அமிர்தசரஸ் எம்.பி.தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் நிலவிய தடை நீங்கியுள்ளது.
1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பாட்டியாலா நகரில் குர்னாம் சிங் என்பவருக்கும், சித்து மற்றும் அவரதுநண்பர்களுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் நவ்ஜோத் சிங் கும்பலால் குர்னாம் சிங் தாக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து சித்துவும், அவரது நண்பர்ரூபிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கிலிருந்து 1999ம் ஆண்டு இருவரும் மாவட்ட நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த பஞ்சாப் நீதிமன்றம் சித்து குற்றவாளி என சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பளித்தது. அவருக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து சித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அடுத்த நாளே ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த நிலையில் 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்அப்பீல் செய்தார் சித்து. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர்,ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை பஞ்சாப்,ஹரியானா உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், சித்துவின் மேல் முறையீட்டு மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதன் மூலம் தான் ராஜினாமா செய்த அமிர்தசரஸ் தொகுதியில் மீண்டும் சித்து போட்டியிடும் வாய்ப்புஉருவாகியுள்ளது. அமிர்தசரஸ் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 25ம்தேதிதான் கடைசி நாளாகும்.
எனவே சித்து மீண்டும் பாஜக சார்பில் இங்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications