மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் ஒரு காதல் யுத்தம்!
சென்னை:நியூயார்க்கிலிருந்து சென்னை வந்த தன்னை வரவேற்க காத்திருந்த தாயையும், தாய் மாமாவையும் விட்டு விட்டுகாத்திருந்த காதலருடன் இளம்பெண் ஆட்டோவில் பறந்தார். அவரைக் கடத்துவதாக பெண்ணின் மாமாகூறியதால் ஆட்டோவை ஓட்டிய காதலரை பொதுமக்கள் சேர்ந்து நையப் புடைத்ததால் விமான நிலையத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து வந்த அவர் அதை விட்டுவிட்டு இப்போது ஷேர் மார்க்கெட் பிசினஸில் ஈடுபட்டுள்ளார். ராயப்பேட்டையில் தங்கியுள்ளார்.
இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் ராஜ்லிண்டா கவுர். பஞ்சாபைச் சேர்ந்த ராஜ்லிண்டா கவுர், தனது மாமா வீட்டில்தங்கியிருந்தார். இவருக்கு தந்தை கிடையாது. தாயார் பஞ்சாபில் இருந்தார். பி.எஸ்.சி. வரை படித்துள்ள கவுர்,தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
எதிர் எதிர் வீடுகளில் இருந்த கவுருக்கும், அனில் குமாருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதை அறிந்த கவுர்குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் கவுரும், குமாரும் காதலில் தீவிரமாக இருந்தனர்.
இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன் கவுரை அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.இதனால் நேரில் பார்த்துக் கொள்ள முடியாமல், காதலர்கள் பரிதவித்தனர். இருப்பினும் இ-மெயில், சாட்டிங்,போன் மூலம் காதலை தொடர்ந்தனர்.
இந் நிலையில் கவுருக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதை அறிந்த கவுர் திடுக்கிட்டார்.இனியும் இங்கிருந்தால் தன்னை வேறு யாருக்காவது கட்டி வைத்து விடுவார்கள் என பயந்த அவர் முதலில்இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தார்.
அனில்குமாரை தான் மறந்து விட்டதாகவும், யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளத் தயாராகஇருப்பதாகவும் சென்னைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து கவுரை சென்னைக்கு வருமாறு அவரதுமாமாவும், தாயாரும் அழைத்தனர்.
அதன்படி நியூயார்க்கிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்தார் கவுர். நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம்சென்னையை அடைந்தது.
கவுரை வரவேற்க அவரது தாயாரும், மாமாவும் வந்திருந்தனர். ஆனால் கவுர் தனது காதலர் அனில்குமாருக்கும்ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தார். அனில்குமாரும் ஒரு ஆட்டோவில் தயாராக காத்திருந்தார்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த கவுர், நைசாக அங்கிருந்து வெளியேறி தயாராக காத்திருந்தஅனில்குமாருடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டார். ஆனால் இதை கவுரின் மாமா பார்த்து விட்டு, பெண்ணைக்கடத்துவதாக கூறி கூச்சல் போட்டார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆட்டோவை அங்கிருந்தவர்கள்மடக்கிப் பிடித்து ஆட்டோவை ஓட்டிய அனில்குமாரை சரமாரியாக அடித்தனர். ஆனால் அவர்களை தடுத்துநிறுத்திய கவுர், அனில்குமார் தனது கணவர் எனவும், குடும்பத்தினர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கவுருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மாமாவும், தாயாரும் கூறினர். இதனால் கு ழம்பியபொதுஜனம் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்து விமான நிலைய காவல் நிலையத்தில்கொண்டு போய் ஒப்படைத்தது.
போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கவுர், தான் அனில்குமாருடன் வாழவேவிரும்புவதாக உறுதியாக தெரிவித்தார். இருவரும் மேஜர் என்பதால் இவர்களை கட்டாயப்படுத்த முடியாது,பேசாமல் அவர்களுக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று கவுரின் தாயாரிடம் போலீஸார் அறிவுரை கூறினர்.
ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். இதையடுத்து கவுர் தனது விருப்பப்பபடி யாருடனும் போகலாம் எனபோலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து அவர் அனில்குமாருடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
நள்ளிரவில் நடந்த இந்த காதல் யுத்தத்தால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications