எனக்கு பழி உணர்ச்சி இல்லை-கருணாநிதி
சென்னை:எனக்கு பழி உணர்ச்சியோ, அவருக்கு பகை உணர்ச்சியோ இல்லை. எல்லாம் மறைந்து போய்விட்டது. இதற்குக்காரணம் தமிழ் உணர்ச்சி தான் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் 2006ம் ஆண்டுக்கான கலைஞர் விருதுகளை முதல்வர் கருணாநிதி,கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.
![]() |
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், எழுத்தாளர் ஜெயகாந்தன், நடிகை மனோரமா ஆகியோருக்கு ரூ. 1 லட்சம்நிதியும் விருதுகளையும் வழங்கி கருணாநிதி பேசுகையில்,
நாடகம், திரையுலகில் ஏன் அரசியல் உலகிலும் கூட எனக்கு சார்பாகவும் எதிராகவும் அரும்பணியாற்றியவர்கலைப் பேரரசி மனோரமா. எழுத்து வேந்தர் ஜெயகாந்தன் 1980ல் என் பிறந்த நாளின்போது ஒரு புத்தகத்தைபரிசாக தந்தார். அதன் பெயர் வாக்குமூலம்.
அவர் எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வர இயலாவிட்டாலும் ஒன்றிரண்டை படித்துவிட்டுத் தான்வந்தேன். எந்த நிலையிலும் அவரது எழுத்துக்களை நேசிப்பவன் நான்.
நித்ைதுப் பார்க்கிறேன் என்ற நூலில் அவர், என் சுயமரியாதை எனக்கு முக்கியம். ஆனால், மற்றவர்கள்சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. நான் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டதாக கூறுகின்றனர். பாம்பு பல்லைஇழக்காமல் இருந்தால் சரி தான். பெட்டிக்குள் இருப்பதால் பாம்பு புழுவாகிவிடாது. துள்ளி துள்ளி குதிப்பதால்புழுக்கள் பாம்பாவது இல்லை என்று எழுதியுள்ளார்.
வள்ளலாரும் சங்காராச்சாரியாரும் ஒருமுறை சந்தித்தபோது எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்என்று பெரியவாள் கூறியதும், அப்படியானால் தந்தை மொழி தமிழ் என்று வள்ளலார் கூறினாராம். இதையும்ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
காலம் எவ்வளவு மாறியிருக்கிறது. எனக்கு பழி உணர்ச்சியோ, அவருக்கு பகை உணர்ச்சியோ இல்லை. மறைந்துபோய்விட்டது. இரண்டுக்கும் காரணம் தமிழ் உணர்ச்சி தான்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுய நிர்ணய உரிமை வழங்காத அரசியல் சட்டத்தை அடிமை சாசனமாகவே கருதவேண்டும். அதனால் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஜெயகாந்தன்.
அரசியல் சட்டத்தையே காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப புதிதாக இயற்ற வேண்டும் என்கிறது எனது அரசு. நமக்குள்எவ்வளவு பொறுத்தம். அரசியல் ரீதியாகவும், நாங்கள் எதிர்காலத்திலே ஒன்றுபடக் கூடிய சூழ்நிலை இந்தப்புத்தகத்தின் வாயிலாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
எங்களுக்கு இலக்கியத்திலே ஐயப்பாடு வருகிறபோதெல்லாம் நான் அதுபற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளுகிறவர்களில் ஒருவராக சிலம்பொலி செல்லப்பன் உள்ளார்.
புலவர் குழந்தை எழுதிய ராவண காவியத்தை, கதாகாலேட்சபம் போல தமிழகத்திலே பரப்பி எங்களைப்போன்றவர்களின் உள்ளங்களையெல்லாம் கவர்ந்தவர் சிலம்பொலி செல்லப்பன்.
ஆச்சி மனோராமா இன்னும் நடிக்க வேண்டும் என்று பேசினார்கள். மனோரமாக இப்போது பெரியாருக்கேதாயாக நடித்தாலும் சரி, எத்தனை படத்தில் நடித்தாலும் சரி, நாடகம் என்றால் மணிமகுடம் நாடகத்தில்புரட்சிக்காரி அல்லியாக நடித்த அந்த கதாபாத்திரத்தைப் போல இனிமேல் மனோரமாவே நடித்தால் கூட அப்படிநடிக்க முடியாது.
நான் எழுதிய வசனம் என்பதற்காக அதைச் சொல்லவில்லை. தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்ததைப்போல சிவாஜி கணேசனால் கூட மீண்டும் நடிக்க முடியாது. பத்மினி அப்படத்தில் நடித்ததைப் போலபத்மினியால் கூட நடிக்க முடியாது. அதுபோலவே மனோரமாவால் கூட மீண்டும் அப்படி நடிக்க முடியாது.
அப்படிப்பட்ட சிரஞ்சீவிப் படங்கள், என்றென்றும் நிலைக்கத் தக்க படங்கள், என்றென்றும் முத்திரை பதித்தபடங்கள் பல இருந்தாலும் கூட அதைப் போல இன்னும் பல பொக்கிஷங்களை தமிழகத்திற்கு மனோரமா தரவேண்டும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் முரசொலி அறக்கட்டளை உறுப்பினர்களாக செ.குப்புசாமி, உசேன், அமைச்சர்கள், திக தலைவர்வீரமணி, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்எம் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி













Click it and Unblock the Notifications