மாநகராட்சி வழக்கு: 3வது நீதிபதி மிஸ்ரா
சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ராஅறிவிக்கப்பட்டுள்ளார்.
வன்முறையைத் தொடர்ந்து தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா>த்தது.இறுதியில் இரு நீதிபதிகளும் முரண்பாடான தீர்ப்பை அளித்தனர்.
நீதிபதி முகோபாத்யாயா அளித்த தீர்ப்பில், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். ஆனால் நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பில், 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.மேலும், தேர்தல் ஆணையர், டிஜிபி, காவல்துறை ஆணையர் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இரு நீதிபதிகளும் முரண்பாடான தீர்ப்பை வழங்கியதால், இறுதி முடிவுக்கு வர 3வது நீதிபதியை நியமிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ரா இவ்வழக்கை விசாரிப்பார் எனதலைமை நீதிபதி ஏ.பி. ஷா இன்று அறிவித்தார்.
விரைவில் நீதிபதி பி.கே.மிஸ்ரா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பார். அதன் பின்னர் 3 பே>ல்மெஜாரிட்டியாக உள்ள தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், இந்த தீர்ப்புக்கு முன்னதாகவே 99 வார்டுகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணிகவுன்சிலர்கள் ராஜினாமா செய்வார்கள் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்தனர். ஆனால் சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிகவுன்சிலர் ஆம்ஸ்டிராங் மட்டும் ராஜினாமா செய்ய முடியாது என மறுத்து விட்டார்.
இந் நிலையில் சென்னை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் நாளை துணை மேயர்சத்யபாமா தலைமையில் நடைபெறுகிறது.
இக் கூட்டம் கடந்த 19ம் தேதி மாநகராட்சிக் கூட்டம் துணை மேயர் சத்யபாமாதலைமையில் நடைபெற இருந்தது. இதில் மேயரின் ராஜினாமா கடிதத்திற்குமாமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சில சட்ட சிக்கல்கள்காரணமாகவே அக்கூட்டம் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. சென்னை மேயர்பதவிக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே வர முடியும் என்ற சட்டம் அப்போது அமலில்இருந்ததால் கூட்டத்தைக் கூட்டவில்லை.
இந்த நிலையில் சட்டசபையில், சென்னை மேயராக ஒருமுறை மட்டுமே ஒருவர்பதவி வகிக்கலாம் என்ற தடையை நீக்கும் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுநேற்று நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் மா.சுப்பிரமணியத்தை மீண்டும் மேயர் பதவிக்கு போட்டியிட வழி வகைசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெறும் என துணைமேயர் சத்யபாமா அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும்அவர் கூறியுள்ளார். நாளைய கூட்டத்தில் மேயரின் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல்தரப்படும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications