கருணாநிதி-ப.சி-ஸ்டாலின் கொடும்பாவிகள் எரிப்பு
சென்னை: விஜயகாந்தின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதியின்கொடும்பாவியை எரித்து மாநிலம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர்.
விஜயகாந்த்தின் சென்னை, மதுரை வீடுகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில்நேற்று வருமான வரி சோதனை நடந்தது.
![]() |
இது தேமுதிகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் தூண்டுதலின்பே>ல்தான் வருமான வரி சோதனை நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் கருணாநிதியின்கொடும்பாவி எரிக்கப்பட்டது.
விஜய்காந்த் வீட்டருகே கருணாநிதி கொடும்பாவியை எரிக்க முயன்றவர்களை போலீஸாார் தடியடி நடத்திக்கலைக்க முயன்றனர்.
ஆனால் தொண்டர்கள் கலையாமல் போக மாட்டோம், வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினர்.இதையடுத்து 300க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் வளசரவாக்கம் முருகப்பாதிருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காவல் நிலையம் சென்ற விஜயகாந்த், கைது செய்யப்பட்டிருந்ததேமுதிக நிர்வாகிகள் நான்கு பேரை சொந்த ஜாமீனில் விடுவித்து அழைத்துச் சென்றார்.
திருப்பூ>ல் பல்வேறு இடங்கலில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின், மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களின் கொடும்பாவியையும்எரிக்க முயன்றனர். ஆனால் போலீஸார் வந்தபோது கொடும்பாவியை மறைத்து விட்டனர்.
இதனால் போலீஸார் கொடும்பாவி இல்லை என்று நிம்மதி அடைந்தனர். ஆனால் திடீரென ஒரு மாருதி காரில்கொண்டு வரப்பட்ட கொடும்பாவிகளை சடாரென சாலையில் போட்டு கொளுத்தியதால் போலீஸார் அதிர்ச்சிஅடைந்தனர்.
உடனடியாக கொடும்பாவியை அவர்களிடமிருந்து பிடுங்க பாலீஸார் முயன்றனர். அப்போதுசப்இன்ஸ்பெக்டர் பொன்னுத்தாய் தீயில் சிக்கினார். அவரது முகம், கழுத்து, கையில் தீக்காயம் ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 136 பேரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் பின்னர் செளடேஸ்வரி திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரைத் தவிர மற்றவர்களை போலீஸார் இரவில்விட்டு விட்டனர். மற்றவர்கள் மீது உருவப் பொம்மையை எரித்தது, அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம்ஏற்படுத்தியது உள்ளிட்ட பி>வுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கோவையில் 500 பேரும், அவினாசியில் 38 பேர், ஊட்டியில் 50 பேர், திண்டிவனத்தில் 4 பேர்,மயிலத்தில் 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாச்சலத்தில் தேமுதிகவினர் கூடி கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தனர். இதுதொடர்பாக 4 பேர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருத்தாச்சலத்தில் தேமுதிகவினருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் அங்கு மோதல் மூளும்சூழ்நிலை உருவானது. பின்னர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று திமுகவினர் கலைந்து சென்றதால் பிரச்சினைதணிந்தது.
ஆரணியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேர் கைதானார்கள். கள்ளக்குறிச்சியில் 100 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கருணாநிதி கொடும்பாவியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நெல்லையிலும் தேமுதிகவினர் பல்வேறு இடங்களில் மறியல் செய்தனர். கொடும்பாவியை எ>த்ததாக பலர்கைதாகினர். கன்னியாகுமரி மாவட்ட தேமுதிகவினர் முதல்வர் கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டிகள்ஒட்டியுள்ளனர்.
இதேபோல திருச்சி, நாகர்கோவில், துறையூர், உப்பிலியாபுரம், ஈரோடு, தாராபுரம், பவானி,கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், நாமக்ல், செந்துரை, மணப்பாறை, துவரங்குறிச்சி என பல்வேறுபகுதிகளிலும் போராட்டம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இரண்டு பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. தாதக்காப்பட்டியில் அரசு நகரப்பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக தேமுதிக கிளைச் செயலாளர் நல்லதம்பியை போலீஸார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications