கருணாநிதி விலகும் வரை அதிமுக ஓயாது-ஜெ
சென்னை:தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உள்ளாட்சித் தேர்தல் பழைய முறைப்படி நடந்தால் திமுக தோல்வியைத் தழுவும் என்பதால் அனைத்துக்கட்சிகளும் எதிர்த்த நிலையில் மறைமுக தேர்தல் முறையை கருணாநிதி கொண்டு வந்தார்.
மறைமுக தேர்தலாலும் திமுக வெற்றி பெற முடியாது என்பதை புரிந்துகொண்ட கருணாநிதி அராஜகத்தையும்,ரெளடியிசத்தையும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழகம் முழுவதும் பயன்படுத்தி மக்களே பங்கு பெறாத ஒருதேர்தலை நடத்தி முடித்துள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 99வார்டுகளில் மறுதேர்தல் அறிவித்துள்ளது. இதில், சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் உள்ள 8 வார்டுகளில்ஏழு வார்டுகளில் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கருணாநிதி இதுவரை எவ்வித பதிலும்தெரிவிக்கவில்லை.
காவல்துறையைக் கைவசம் வைத்துள்ள கருணாநிதியும், உள்ளாட்சித் துறையைக் கைவசம் வைத்திருக்கும்ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குபொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
இதோடு, இவ்விருவரின் தொகுதியில் உள்ள வார்டுகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்துஇருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கருணாநிதியும்,அவரது மகனும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடிஎப்போது ஒரு மாநிலத்தில் அந்த மாநில அரசின் செயல்பாடுகள் நடைபெறவில்லையோ, அந்த மாநில ஆட்சிகலைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்படவேண்டும் என உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் பதவியில் இருந்துஅப்புறப்படுத்தப்பட வேண்டும். இது ஏற்கப்படாவிட்டால், இந்த இலக்கை அடையும் வரை அடுத்தடுத்த தொடர்நடவடிக்கைகளில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications