பிள்ளை பிடிக்கும் வேலையில் இலங்கை ராணுவம்!
நியூயார்க்:கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகஅமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டுவருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கைராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது.
இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா.
அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம்புலிகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இந் நிலையில் கருணா குழுவினரின் சிறுவர் கடத்தலும், போர்ப் பயிற்சியும் என்ற தலைப்பில் நியூயார்க்கைச்சேர்ந்த அந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீப காலமாக கருணா கும்பல், நூற்றுக்கணக்கான சிறுவர்களைப் பிடித்துக் கொண்டு போய் போர்ப் பயிற்சியில்ஈடுபடுத்தி வருகிறது. கருணா கும்பலுக்கு பிள்ளை பிடித்துத் தரும் வேலையை இலங்கை ராணுவம் செய்துவருகிறது.
இரு தரப்பும் இதை மறுத்தாலும் கூட இவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான சிறுவர்களை கருணாகும்பலில் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 200 தமிழ்ச் சிறுவர்களை கருணா குழுவினர் கடத்தி தங்களதுபடையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் இது மும்மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் நாங்கள் சந்தேகப்படுகிறோம். 18 வயது முதல் 30வரையிலான இளைஞர்களையும் கட்டாயப்படுத்தி தங்களது படையில் சேர்த்துள்ளது கருணா கும்பல்.
கருணா கும்பல் செயல்படும் பகுதிகள் அனைத்துமே இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகள்தான். எனவே இலங்கை ராணுவம், போலீஸ் துணையுடன்தான் கருணா குழுவினர் குழந்தைகள்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை இரு தரப்பாலும் மறுக்க முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் குறித்து இலங்கை அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கிமூன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை அரசுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு வழக்கம் போல் மறுத்துள்ளது. இலங்கை அரசுக்கும்,ராணுவத்திற்கும், கருணா குழுவினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அது சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications