புலிகளுக்கு ஆயுத பாகங்கள்-12 பேர் கைது
சென்னை:இதற்கிடையே சென்னையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களைஅனுப்பியதாக 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதி>ப் பாகங்களை சிலர் அனுப்புவதாக கியூ பி>வுபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் போரூர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் புலிகளுக்கு ஆயுத உதிரி பாகங்களை சப்ளைசெய்வோர் நடமாடுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர்.
போரூரில் போலீஸ் பிடியில் சிலரும், மடிப்பாக்கத்தில் சிலரும் சிக்கினர். அவர்களில் எட்டு பேர் இலங்கைத்தமிழர்கள், மற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 12 பேர் போலீஸ் வசம் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதமாக இதுபோல ஆயுத உதிரி பாகங்களை சப்ளைசெய்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
12 பேரையும் கைது செய்தபோலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications