103 பயணிகளுடன் சூடான் விமானம் கடத்தல்
நஜாமெனா:103 பயணிகளுடன் சூடான் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. விமானம் சாட் நாட்டின் தலைநகர் நஜாமெனாவில்தரையிறங்கியது. விமானத்தை கடத்தியவர் அங்கு சரணடைந்தார்.
இன்று காலை சூடானின் கார்டோம் நகரில் அல்-பஸர் நகருக்குக்கு ஏர் வெஸ்ட் நிறுவன போயிங் 737 விமானம்சென்று கொண்டிருந்தது. அப்போது காக் பிட்டுக்குள் நுழைந்த சைப் ஒமர் என்ற நபர் விமானியின் தலையில்துப்பாக்கியை வைத்தார்.
விமானத்தை அண்டை நாடான சாட் நாட்டுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து விமானத்தை சாட்நாட்டின் நஜாமெனா நகருக்கு விமானி திருப்பினார்.
அங்கு விமானத்தை தரையிறக்க கடத்தல்காரன் அனுமதி தந்தான். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையேவிமானம் அங்கு தரையிறங்கியது. இதையடுத்து சைப் ஒமர் கைது செய்யப்பட்டான். ஒமர் பிரான்சில்தஞ்சமடைய அனுமதி கேட்டதாகத் தெரிகிறது.
சாட், சூடானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் அரசுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
சூடானின் ஏர் வெஸ்ட் நிறுவன விமானங்கள் விபத்துகளுக்கு பேர் போனவை. இதனால் இந்த விமானங்கள்தரையிறங்க ஐரோப்பிய நாடுகளில் தடையுள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானம் சென்று கொண்டிருந்த அல்-பஸர் நகரம் சூடான் எல்லையான டார்பர் பகுதியில் உள்ளது. உள் நாட்டுபோரால் பாதிக்கப்பட்ட பல லட்சம் சூடான், சாட் நாட்டினர் இங்கு அகதிகளாக குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவுக்கும், குடிநீருக்கும், தங்கும் இடத்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது இந்த டார்பர் பகுதியில்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications