ஓடும் ரயிலில் பிரவுசிங்-இந்திய ரயில்வே திட்டம்
டெல்லி:நாடு முழுவதும் 250 ரயில் நிலையங்களில் இன்டர்நெட் மையங்கள்அமைக்கப்படவுள்ளன. மேலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிநவீனவயர்லெஸ் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில்டெல் கார்பரேஷன் இந்த வசதிகளைஏற்படுத்தவுள்ளது. முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் சதாப்தி, ஜனசதாப்தி,ராஜ்தானி ஆகிய ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
இதுகுறித்து மேற்கு ரயில்வே மண்டல மேலாளர் சத்யபிரகாஷ் கூறுகையில், இதன்மூலம், ஓடும் ரயிலில் இன்டர்நெட், வீடியோ கான்பரன்சிங், சாட்டிங் செய்ய முடியும்.இதனால் ரயில்வே வருமானமும் அதிகரிக்கும். எனவே இந்த வசதிகளை அளிக்கமுடிவெடுத்துள்ளோம்.
பயணிகளுக்கு தடையற்ற தகவல் தொடர்பு வசதிகள் கிடைப்பதுடன், வயர்லெஸ்இன்டர்நெட் வசதியால் பயணிகள் லேப்டாப்பையும் இயக்க முடியும்.
மும்பையில் சத்ரபதி சிவாஜி, சர்ச்கேட், மும்பை சென்ட்ரல், தாதர் போன்ற ரயில்நிலையங்களில் முதலில் அறிமுகப்படுத்தி, அதன் வரவேற்பை பொறுத்து நாட்டின்மற்ற முக்கிய ரயில் நிலையங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றார்.
இந்த புதிய வசதிகள் குறித்து ரயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,இத்திட்டத்தின் மூலம் 500 முக்கிய ரயில் நிலையங்கள் அதிநவீன வயர்லெஸ்இன்டர்நெட் வசதியை பெறும். 250 ரயில் நிலையங்களில் இன்டர்நெட் மையங்கள்அமைக்கப்படும்.
இதற்காக ரயில்களில் டிரான்ஸ்மீட்டர்கள், ஆன்டனாக்கள் பொருத்தப்படும். ரயில்நிலையங்களிலுள்ள டவர்களிலிருந்து, ரயிலில் சென்றபடி தடையின்றி இன்டர்நெட்வசதியைப் பெறலாம் என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications