நீதிபதி கண்காணிப்பில் தேர்தல்-அதிமுக வழக்கு
சென்னை:சென்னை மாநகராட்சியின் 98 வார்டுகளுக்கான மறு தேர்தலை ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கில்உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து திமுககூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்து விட்டனர்.
இதையடுத்து அங்கு விரைவில் மறு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், சென்னை மாநகராட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்தன. இதுதொடர்பாகதொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து தற்போது 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்துள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.ஆளுங்கட்சிக்கு சார்பான தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். தொடர்ந்துபதவியில் நீடிக்கிறார்.
எனவே வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதிமேற்பார்வையில் மறு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தல்ஆணையர் அந்த பதவியில் நீடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
7 நிமிடமே நடந்த மாநகராட்சி கூட்டம்:
இந் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களின் ராஜினாமாவுக்கு மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் இன்று ஒப்புதல் தரப்பட்டது.
இன்று காலை துணை மேயர் சத்யபாமா தலைமையில், மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் 55 கவுன்சிலர்கள்பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட 98 கவுன்சிலர்களின் ராஜினாமா கடிதங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல மேயர் தனதுபதவியைை ராஜினாமா செய்ததற்கும் ஒப்புதல் தரப்பட்டது.
அதன் பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 7 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications