திணேஷ் அபாரம்: இந்தியாவுக்கு 2வது வெற்றி

Subscribe to Oneindia Tamil

கட்டாக்:கட்டாக்கில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில்இந்தியா வீழ்த்தியது. தமிழகத்தைச் சேர்ந்த திணேஷ் கார்த்திக் அபாரமாக ஆடியதால் இந்தியாதோல்வியிலிருந்து தப்பியது.

இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 2வது போட்டி கட்டாக்கில் நேற்று பகல் இரவுப் போட்டியாக நடந்தது.

நேற்றைய போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் லாரா காயம் காரணமாகவிளையாடவில்லை. இந்திய அணியில் ஜோகிந்தர் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. காம்பீரும், கங்குலியும் ஆட்டத்தைத்தொடங்கினர். முதல் போட்டியைப் போல இன்றும் அடித்துக் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்பெரும் அதிர்ச்சியைக் காடுப்பதாக இருந்தது அவர்களது ஆட்டம்.

காம்பீர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டிராவிட் சற்றே அடித்துஆடினார். ஆனால் மறுமுனையில் கங்குலி 132 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாற்றத்தைசந்தித்தது.

பின்னர் வந்த சச்சின் டெண்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பியபோது ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். இதனால் பெரும் சரிவில் இந்திய அணி இருந்தபோது திணேஷ் கார்த்திக் வந்து சேர்ந்தார். வந்ததுமுதலே அடித்து விளையாட ஆரம்பித்த திணேஷால், ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

அவர் ஒருமுனையில் அடித்து விளையாடி வந்த நிலையில் மறுமுனையில் டோணி, ஜோகிந்தர் சர்மா, ஹர்பஜன்சிங் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். இதனால் இந்தியா 100 ரன்களையாவதுஎடுக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் கார்த்திக்குக்குத் துணையாக அஜீத் அகர்கர் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்துபந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி அணியின் தொய்வை நிமிர்த்தி ரன் குவிப்பை உருவாக்கினர்.

இருவரும் பொறுப்பாகவும், அதேசமயம் அதிரடியாகவும் ஆடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தனர்.குறிப்பாக திணேஷ் ஆடிய ஆட்டம்தான் அட்டகாசமாக இருந்தது. எந்தப் பயமும் இல்லாமல் அவர் சிறப்பாகஆடினார்.

63 ரன்கள் எடுத்த நிலையில், பிராட்ஷா பந்தில் போல்டு ஆகி வெளியேறினார் திணேஷ். இருப்பினும் அகர்கர்சிறப்பாக ஆடி 40 ரன்கள் எடுத்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார். இறுதியில் 48.2 ஓவர்களில்இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை சேர்த்தது.

இதைத் தொடர்ந்து மேற்கு இந்திய அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.தொடக்க ஆட்டக்கார்ரகளான சந்தர்பாலும், கெய்லும் பொறுமையாக ஆடத் தொடங்கினர். ஆனால் கெய்ல் 5ரன்கள் எடுத்திருந்த நிலையில், அகர்கர் பந்தில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த சுமித் 15 ரன்களை சேர்த்தார். சாமுவேல்ஸ் 1 ரன்னுடன் வெளியேறினார். இருப்பினும் சந்தர்பால்படு நிதானமாக ஆடி வந்தார். அவருக்குத் துணையாக பிரேவோ நிறுத்தி நிதானமாக ஆடினார். இருவரும்இணைந்து விக்கெட் சரிவை சற்று நேரம் தடுத்து நிறுத்தி, பொறுமையாக ரன்களை சேர்த்தனர்.

பிரேவோ 31 ரன்கள் எடுத்த நிலையில் ரமேஷ் பவார் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்தமார்ட்டன் ரன் ஏதும் எடுக்காமல் பவார் பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் சுமித் நிதானமாக ஆடி 25 ரன்களை சேர்த்தார். வெற்றி இலக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தும்இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துவந்தனர்.

சந்தர்பால் மட்டுமே நிதானமாக ஆடி வந்தார். இறுதியில் 48.2 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தால்வியைத்தழுவியது.

ஆட்ட நாயகனாக திணேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3வது போட்டி சென்னையில் வரும் சனிக்கிழமைநடைபெறுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலைவகிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+