சென்னை-வீடியோ கான்பரன்ஸ் மூலம் டைவர்ஸ்
சென்னை:இந்தியாவிலேயே முதன்முறையாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்ணிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம்விசாரணை நடத்தி அவருக்கு விவாகரத்து அளித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.
சென்னையைச் சேர்ந்தவர் அரசு (வயது 33). கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும்,காயத்ரி என்பவருக்கும் கடந்த 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 8 மாதங்களுக்குமுன் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் மனு செய்தனர்
வழக்கு விசாரணைக்குப் பின்னர் 6 மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந் நிலையில், காயத்ரி வேலை கிடைத்துஆஸ்திரேலியா போய் விட்டார்.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் காயத்ரியால் நேரில் ஆஜராக முடியாத நிலைஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை நீதிமன்றம் ஏற்றது. இதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் நடத்தி காயத்ரியிடம் இங்கிருந்தபடிவிசாரணை நடத்தி விவகாரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications