தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை:தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குனராக இருந்த கோவிந்தன், அதே துறையின் செயலாளராகமாற்றப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளராக இருந்த செல்வம் முக்கியத்துவம்வாய்ந்த வருவாய்த்துறை செயலாளராக்கப்பட்டுள்ளார்.
இதுவரை வருவாய்த்துறை செயலாளராக இருந்த ஆதிசேஷய்யா பொதுத் துறை செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை இணைச் செயலாளராக இருந்த கண்ணா பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை இயக்குனராக்கப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித் துறை கூடுதல் செயலாளரான அண்ணாமலைக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஇயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த அபூர்வா, மகப்பேறு, குழந்தைகள்சுகாதாரம் மற்றும் நலத் துறை கமிஷனராக்கப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த சுந்தரதேவன், சிப்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்பதவியில் இருந்து தூக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் துறை செயலாளராக இருந்த ஜோதி ஜெகராஜன் சிப்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகநியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக வரித் துறை இணை கமிஷ்னராக (வடக்கு) இருந்த காக்கர்லா உஷா, சென்னை மாநகராட்சியின் கல்விப்பிரிவின் இணை கமிஷ்னராக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை துணைச் செயலாளராக இருந்த ஆஷிஷ் சாட்டர்ஜிசென்னை மாநகராட்சி துணை கமிஷ்னர் (பணிகள்) பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல தமிழக பொதுத் துறை செயலராக இருந்து, மேற்படிப்புக்காக விடுப்பில் சென்று திரும்பியுள்ளகிரிஜா வைத்தியநாதன் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல பயிற்சி முடித்து திரும்பியுள்ள அதுல்யா மிர்சா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications