ஜனாதிபதியாக கலாமின் கடைசி குடியரசு உரை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இளைஞர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும், துணிச்சலாக சிந்திக்க வேண்டும், கா>யங்களில் துணிச்சலாகஈடுபட வேண்டும் என குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியுள்ளார்.

58வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரையாற்றினார்.ஆல் இந்திய ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் கலாம் உரை இடம் பெற்றது.

கலாமின் உரையில், விட்டுக் கொடுக்கும் துணிச்சல் என்ற தலைப்பில் ஒரு கவிதையும் இடம் பெற்றது. கலாமின்கவிதையும், அவரது உரையும்:

விட்டுக் கொடுக்கும் துணிச்சல்.
இளைஞர்களே,
வித்தியாசமாக சிந்திப்பதில் துணிச்சலாக இருங்கள்,
கண்டுபிடிப்பதில் துணிச்சலாக இருங்கள்,
முடியாததையும் முடித்துக் காட்டுவதில் துணிச்சலாக இருங்கள்,
இதுவரை போகாத பாதையிலும் பயணிக்க துணிச்சலைக் காட்டுங்கள்,
அறிவை பகிர்ந்து கொள்வதில் துணிச்சலைக் காட்டுங்கள்,
வலிகளை துறப்பதில் துணிச்சல் காட்டுங்கள்,
அடைய முடியாத இலக்கை அடைய துணிச்சலைக் காட்டுங்கள்,
பிரச்சினைகளை தீர்ப்பதில் துணிச்சலைக் காட்டுங்கள்.

எனது நாட்டின் இளைஞன் என்ற முறையில், அனைத்து லட்சியங்களையும் சாதித்து நிறைவேற்ற கடுமையாகபாடுபடுவேன் என்று இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்.

நாடு இன்று பல இலக்குகளை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பல சவால்கள் நம் முன் உள்ளன. இந்தசமயத்தில் இளைஞர்களிடம் தைரியமும், துணிச்சலும் பெருக வேண்டும், எதையும் சந்தித்து, சாதித்துக்காட்டுவோம் என்று இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்.

சமூகத்தில் சவால்களை சந்திக்க துணிச்சல் வேண்டும். அப்போதுதான் சவால்களை சமாளித்து வெற்றி பெறவேண்டும்.

2006ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி எனக்கு ஒரு அனுபவம் நேர்ந்தது. அன்று நான் சுகோய் 30 ரக போர்விமானத்தில் பறந்தேன். 40 நிமிடங்கள் வானில் பறந்த பின்னர் என்னிடம் ஒரு இளைஞர் கேட்டார்.பறக்கும்போது பயமாக இருந்ததா என்று.

நான் அந்த இளைஞனிடம் சொன்னேன். 40 நிமிடமும் நான் விமானம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்து விட்டேன். எனவே பயம் என்னை அண்ட என்னால் அனுமதிக்க முடியாமல்போய் விட்டது என்றேன்.

நித்தாரி சம்பவம் பெரும் துயரம்:

ஏராளமான இளம் சிறார்கள் கொடூரமாக கொல்லப்பட்டு சம்பவம் நாட்டுக்கு மிகப் பெரிய சோகத்தைக் கொடுத்துவிட்டது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இது போன்ற குற்ற மனப்பான்மையுடன் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மன நலபரிசோதனைகளை நடத்தி இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க முயல வேண்டும்.

சிறுவர்களுக்கு எதிரான சமீப கால குற்றச் செயல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன. நம் அனைவர் மீதும் இதுஒரு பெரிய களங்கமாக அமைந்துள்ளது.

சிறுவர்கள் நாட்டின் சொத்து. அவர்களுக்கு எதிரான கொடூரப் போக்கு சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இதைபொறுத்துக் கொள்ளக் கூடாது.

சமூகத்தில் உள்ள அனைவரிடமும் கூடுதல் கண்காணிப்புடனும், விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

காவல்துறை, மீடியா, நீதித்துறை ஆகியவை மிக விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.

2020ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்காக தேசிய இயக்கம் ஒன்றை நாம் தொடங்கியாக வேண்டும். 2020க்கு முன்பாகவே நாம்வல்லரசு என்ற அந்தஸ்தை எட்ட உறுதி பூண வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, அமைதியான, பாதுகாப்பான, சந்தோஷமான சமூகம் ஆகியவை அமைய நாம் இலக்கைநிர்ணயித்து செயல்பட வேண்டும்.

இந்த தேசிய இயக்கத்தில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஜனநாயக முறையில் பங்கேற்க வேண்டும்.நாட்டுக்காக நாம் என்ன கொடுத்தோம் என்ற சிந்தனை அனைவருக்கும் வர வேண்டும் என்றார் கலாம்.

கலாமின் கடைசி உரை:

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கலாம் ஆற்றும் கடைசி குடியரசு தின உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி கலாம் நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். மீண்டும்அவரையே குடியரசுத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால், இதை கலாம் விரும்பவில்லை.

இதுவரை நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் தான் 2 முறை பதவி வகித்த ஒரே குடியரசுத்தலைவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+