பெண் தற்கொலை: எஸ்ஐ, போலீஸார் சஸ்பெண்ட்
தாராபுரம்:ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே போலீஸ் விசாரணைக்குப் பயந்து பெண் ஒருவர் கிணற்றில் குதித்துத்தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், 2 தலைமை காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி.நேற்று காலை குண்டடம் காவல் நிலையத்திற்கு ராஜேஸ்வரி வந்தார். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் மொய்தீன்பீரிடம் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், தனது கணவர் மயில்சாமி, அவரது அண்ணன் சின்னச்சாமி, அவரது மனைவி ராஜாத்தி ஆகியோர்தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணைக்காக தலைமைக் காவலர்கள் சங்கர், ராஜகோபால் ஆகியோரை எஸ்.ஐ. பீர் அனுப்பிவைத்தார். அவர்கள் ராஜேஸ்வரியுடன் ஆட்டோவில் சின்னச்சாமி வீட்டுக்குச் சென்றனர். அங்கு போனபோதுசின்னச்சாமி இல்லை.
அவரது மனைவி ராஜாத்தி மட்டுமே வீட்டில் இருந்தார். அவரிடம் சின்னச்சாமி எங்கே என்று போலீஸார்கேட்டுள்ளனர். தோட்டத்தில் இருப்பதாக அவர் கூறவே, ராஜாத்தியையும் அழைத்துக் கொண்டு சின்னச்சாமிதோட்டக்குப் போனார்கள்.
அங்கு சின்னச்சாமி இல்லை. இந் நிலையில், போலீஸார் தன்னை சித்திரவதைப்படுத்தி விடுவார்களோ என்றுபயந்த ராஜாத்தி, தனது உறவினர் பொன்ராஜுவிடம் போலீஸாருக்கு இளநீர் வெட்டிக் கொடுக்குமாறு கூறி விட்டுஅருகே இருந்த கிணற்றை நோக்கி சென்றார். பிறகு திடீரென கிணற்றில் குதித்து விட்டார்.
இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.ஆனால் ராஜாத்தி அதற்குள் இறந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டிஐஜி மஞ்சுநாதா, பணியில் அலட்சியமாக இருந்ததாக இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், எஸ்.ஐ. மொய்தீன் பீர், தலைமைக் காவலர்கள் இருவர் ஆகியோரை ஒட்டுமொத்தமாக தற்காலிகபணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications